பதிவு செய்த நாள்
01 அக்2019
04:46
சென்னை: விவசாயிகள் பெற்றிருக்கும் முன் அனுபவத்தை வைத்து, எந்த விதமான முன் பிணையும் இல்லாமல், கடன் பெற்றுக் கொள்ளலாம் என, பேங்க் ஆப் பரோடா அறிவித்துள்ளது.
இது குறித்து, பேங்க் ஆப் பரோடாவின், சென்னை மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, ‘பரோடா உழவர் திருவிழா’ என்ற பெயரில், அக்., 1 முதல், 15ம் தேதி வரை, தமிழகத்தின், அனைத்து வங்கி கிளைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இதில், விவசாயிகள் பெற்றிருக்கும் முன் அனுபவத்தை வைத்து, எந்த விதமான முன் பிணையும் செலுத்தாமல், கடன் பெற்று கொள்ளலாம்.வங்கி கடன் மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவதற்கும், இந்த திருவிழாவை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், வங்கியில், 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, திருப்பி செலுத்தாத விவசாயிகளுக்கு, சிறப்பு கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதில், சுமார், 70 கோடி ரூபாய் வரை, தமிழகத்தில் மட்டும் வராக் கடனாக உள்ளது. இந்த திட்டத்தின் படி, பெற்ற கடனின் அசலை மட்டும் செலுத்தி, மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|