பதிவு செய்த நாள்
01 அக்2019
04:47
புதுடில்லி: அனில் அம்பானி, நிதிச் சிக்கல்கள் காரணமாக, இரு நிறுவனங்களிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.’ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ், ’ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ என்ற இரு நிறுவனங்களிலிருந்து, டிசம்பர் மாதத்துக்குள் வெளியேற முடிவு செய்துள்ளார், அனில் அம்பானி.
நேற்று நடைபெற்ற, ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ’ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் மூடப்பட்டது. அதன் பின், இப்போது இந்த இரு நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுகிறது, அனில் அம்பானியின், ரிலையன்ஸ் குழுமம்.இதற்கிடையே, ’ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனமும் கடுமையான நிதிச் சிக்கலில் தடுமாறிவருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, அனில் அம்பானி கூறியதாவது:நிதிச் சேவை துறையில் நெருக்கடி, தணிக்கையாளர்கள் மற்றும் தர ஏஜன்சி நிறுவனங்களின் நியாயமற்ற நடவடிக்கைகள், பொருளாதார மந்தநிலை ஆகிய அனைத்தின் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், இந்த இரு நிதிச் சேவை வணிகத்திலிருந்து வெளியேற உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|