பதிவு செய்த நாள்
02 அக்2019
01:24
புதுடில்லி:மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, மாருதி சுசூகி நிறுவனத்தின், எஸ் _ பிரஸ்ஸோ கார், 3.69 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த மினி எஸ்.யு.வி., காரில், மொத்தம் ஒன்பது வேரியன்டுகள் உள்ளன. இந்த காரில், 998 சி.சி., 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது.அனைத்து கார்களிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
இருப்பினும், இந்த காரின் உயர் ரக வேரியன்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.இந்த காரின் இன்ஜின், பி.எஸ்.,6 மாசு உமிழ்வு தரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.இதனுடைய, எஸ்.யு.வி., போன்ற தோற்ற அமைப்பு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. உள்புறம் பெரிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய, ’இன்போடெயின்மென்ட் சிஸ்டம்’ பார்வையை ஈர்க்கிறது. இதில், ’ஸ்மார்ட்பிளே ஆடியோ சிஸ்டம்’ இடம்பெற்றுள்ளது.மொத்தத்தில், மாருதியின் பண்டிகை கால பரிசாக இருக்கிறது இந்த, எஸ் – பிரஸ்ஸோ.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|