தங்க சேமிப்பு பத்திரம் கிராமுக்கு ரூ.3,788 என நிர்ணயம்தங்க சேமிப்பு பத்திரம் கிராமுக்கு ரூ.3,788 என நிர்ணயம் ...  ‘ஆன்லைன் ஷாப்பிங்’கை பாதுகாப்பாக மாற்றும் வழிகள்! ‘ஆன்லைன் ஷாப்பிங்’கை பாதுகாப்பாக மாற்றும் வழிகள்! ...
வேகமெடுக்கும் புதிய தொழில் கொள்கை வரையறைகளை தயாரிக்க புதிய செயற்குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2019
23:52

புது­டில்லி:புதிய தொழில்­துறை கொள்கை குறித்த வரை­ய­றை­களை தயா­ரிக்க, மத்­திய அரசு செயற்­குழு ஒன்றை அமைத்­துள்­ளது.

உல­க­ள­வில், இந்­தி­யாவை ஒரு உற்­பத்தி மைய­மாக மாற்­றும் முயற்­சி­யில், மத்­திய அரசு
ஈடு­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, புதிய தொழில்­துறை கொள்கை ஒன்றை உரு­வாக்­க­வும் அரசு முடிவு செய்­தது. இதன் தொடர்ச்­சி­யாக, தற்­போது புதிய தொழில்­துறை கொள்­கை­யின்
வரை­ய­றை­களை,தயா­ரிக்க, செயற்­கு­ழுவை அமைத்­துள்­ளது.

ஏழு மாநிலங்கள்

மத்­திய அரசு, ஏழு மாநில அர­சு­கள் மற்­றும் உள்­நாட்டு தொழில்­துறை ஆகி­ய­வற்றை சேர்ந்த உறுப்­பி­னர்­களை கொண்­ட­தாக, இந்த செயற்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.இக்­கு­ழு­வா­னது, தொழிற்­து­றை­யின் பிரச்­னை­களை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் கலந்து கண்­ட­றி­யும் என,
வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை அமைச்­ச­கம்தெரி­வித்­துள்­ளது.


இந்த செயற்­குழு, குறு­கிய மற்­றும் நடுத்­தர காலத்­திற்கு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்த தீர்­வு­களை வழங்­கும். அத்­து­டன், தேசிய இலக்­கு­களை அடை­வ­தில், தனி­யார் துறைக்கு இருக்­கும் பங்­கு­க­ளை­யும் வரை­ய­றுக்­கும்.இந்த செயற்­கு­ழு­வில், ஆந்­திரா, அசாம், குஜ­ராத், உத்­த­ர பி­ர­தே­சம், மஹா­ராஷ்டிரா உள்­ளிட்ட ஏழு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த கூடு­தல் தலைமை செய­லர்­கள் அல்­லது தொழில்­துறை பொறுப்­பா­ளர்­கள் இடம்­பெ­று­கி­றார்­கள்.


மேலும், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு மற்­றும் இந்­திய ஏற்­று­மதி அமைப்­பு­களின்
கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட அமைப்­பு­க­ளி­லி­ருந்­தும் உறுப்­பி­னர்­கள் இடம்­பெ­று­வார்­கள்.இந்த செயற்­கு­ழு­வில் வர்த்­த­கம், வரு­வாய், பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் மற்­றும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் என, ஆறு மத்­திய அமைச்­ச­கங்­களை சேர்ந்த கூடு­தல் செய­லர் அல்­லது இணை செய­லர்­கள் உறுப்­பி­னர்­க­ளாக இடம்­பெ­று­கி­றார்­கள்.

புதிய பரிந்துரை

தொழில்­துறை மற்­றும் உள்­நாட்டு வர்த்­தக மேம்­பாட்டு துறை, ஏற்­க­னவே ஒரு கொள்கை வரைவை தயா­ரித்து, அமைச்­ச­ரவை­ யின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்பி இருந்­தது. இருப்­பி­னும், கொள்கை தொடர்­பாக மேலும் சில புதிய பரிந்­து­ரை­கள் சேர்க்­கப்­பட்­டுள்ளன.புதிய தொழில் கொள்­கையை உரு­வாக்­கும் முயற்­சி­யில், தொழில் மற்­றும் உள்­நாட்டு வர்த்­தக மேம்­பாட்டு துறை, மே 2017ல் இறங்­கி­யது. இந்த புதிய கொள்கை, தேசிய உற்­பத்தி கொள்­கையை
உள்­ள­டக்­கி­ய­தா­கும்.


அடுத்த, 20 ஆண்­டு­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது,வெளி­நாட்டு தொழில் நுட்ப பரி­மாற்­றத்தை ஊக்­கு­விப்­பது, ஆண்­டு­தோ­றும், 7 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்ப்­பது ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், புதிய தொழில் கொள்கை அமை­வ­தற்­கான ஆலோ­ச­னை­கள் நடை­பெற்று வரு­கின்றன.


நாட்­டின் முத­லா­வது தொழிற்­துறை கொள்கை, 1956ம் ஆண்­டி­லும், இரண்­டா­வது தொழிற்­கொள்கை, 1991ம் ஆண்­டி­லும் உரு­வாக்­கப்­பட்­டது. தற்­போது, மூன்­றா­வ­தாக புதிய கொள்கை உரு­வாக்­கப்­பட்டு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)