பதிவு செய்த நாள்
08 அக்2019
01:39
புதுடில்லி, அக். 8–வர்த்தக வாகனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என, தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
மந்தமான பொருளாதார வளர்ச்சி, நிதிச் சூழலில் உள்ள நெருக்கடிகள் காரணமாக, நடப்பு நிதியாண்டின் மீதி காலாண்டுகளிலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை குறைந்தே இருக்கும் என, இக்ரா தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:முகவர்களின் இருப்பு அதிகரிக்கப்பட்டு, சில்லரை விற்பனை குறைந்து வரும் நிலையில், அடுத்த அரையாண்டில், மொத்த விலை வினியோகம் குறையும் என கருதப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில், வர்த்தக வாகனங்களின் விற்பனை, 10 முதல், 12 சதவீதம் வரை குறையக்கூடும்.
உள்நாட்டு வர்த்தக வாகனங்களின் விற்பனை, கடந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து சரிவு காணத் துவங்கியது. இது, நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில், மேலும் மோசமாகியுள்ளது.குறிப்பாக, நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இதுவரை இவற்றின் விற்பனை, 32 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.இவ்வாறு, இக்ரா தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|