பதிவு செய்த நாள்
11 அக்2019
00:12

புதுடில்லி:பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம், அதன் நிதிச் சேவை வணிகம் குறித்து, தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் புகார் கொடுத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:பங்குச் சந்தை பங்கேற்பாளர்கள் சிலர், நிறுவனத்தின் நிதிச் சேவை வணிகத்துக்கு எதிராக, தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பங்குதாரர்களிடையே பீதியை உருவாக்கும் வகையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.எங்களுடைய அனைத்து பங்குதாரர்களின் நலனை முன்னிட்டு, சமூக ஊடக தளங்களில் நிறுவனத்தை பற்றி தவறான வதந்திகளை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் எதிராக செபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில், கடன் வாங்குபவர்களிட மிருந்து திருப்பிச் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே செலுத்துதல் மூலமாக கிட்டத்தட்ட, 19 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுள்ளோம். கடந்த ஓராண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை திருப்பி செலுத்தி உள்ளோம்.மேலும், கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து இதுவரை, 24 ஆயிரம் கோடி ரூபாயை, நீண்ட கால நிதியாக திரட்டி உள்ளோம். இவை எங்கள் வணிகம் குறித்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.இவ்வாறு பிரமல் என்டர்பிரைசஸ் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|