பதிவு செய்த நாள்
11 அக்2019
00:16

மும்பை:நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்துட்ப சேவை நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனம், 8,042 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது.கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனம், 7,901 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்டு
நிறுவனத்தின் வருவாய், 5.8 சதவீதம் உயர்ந்து, 38 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த நிதியாண்டில், இதே காலகட்டத்தில், இதுவே, 36 ஆயிரத்து 854 கோடி ரூபாயாக இருந்தது.தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் செல்வதை அடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு, இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு, 5 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், சிறப்பு டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு, 40 ரூபாய் வழங்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.
நம்பிக்கை
இதையடுத்து, டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு மொத்தம், 45 ரூபாய் கிடைக்கும்.இந்த டிவிடெண்ட் தொகை, பங்குதாரர்களுக்கு இம்மாதம், 24ம் தேதியன்று கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
நிதிச் சேவைகள் மற்றும் ரீடெய்ல் பிரிவுகளில் ஏற்ற – இறக்கங்கள் அதிகரித்திருந்த போதும், இந்த இரண்டாவது காலாண்டை நிலையான வளர்ச்சியுடன் நிறைவு செய்துள்ளோம்.எங்கள் சேவைகளுக்கான தேவை, நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் தொடர்ந்து வலுவாக இருப்பதால், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிகமான ஆர்டர்கள் பெற்றதே இதற்கு சாட்சி.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|