தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார்தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார் ...  தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது ...
‘இன்போசிஸ்’ நிகர லாபம் 2.2 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2019
23:27

புதுடில்லி:நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய, தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 2.2 சதவீதம் சரிந்துள்ளது.


செப்டம்பர் மாதத்துடன்முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்து, 4,019 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4,110 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



நிறுவனத்தின் வருவாய், இரண்டாவது காலாண்டில், 9.8 சதவீதம் அதிகரித்து, 22 ஆயிரத்து, 629 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 20 ஆயிரத்து, 609 கோடி ரூபாயாக இருந்தது.

இதையடுத்து, நிறுவனம் அதன் நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியை, நிலையான நாணய மதிப்பு அடிப்படையில், 9 முதல், 10 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது.முன்னதாக, நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி, 8.5 முதல், 10 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தது.தற்போது, இடைக்கால டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு, 8 ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.


காலாண்டு முடிவுகள் குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சலில் பரேக்கூறியதாவது:எங்கள் செயல்திறன் பல பரிமாணங்களில் வலுவாக இருந்தது. குறிப்பாக வருவாய் வளர்ச்சி, டிஜிட்டல் வளர்ச்சி, செயல்திறன், பெரிய ஒப்பந்தங்கள் என பலவற்றில் வலுவாக இருந்தது.


இவை அனைத்தும், வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட எங்கள் பயணத்தில் சிறப்பாக முன்னேறி வருவதற்கும், பங்குதாரர்களுக்கான மதிப்பை அதிகரிப்பதற்குமான தெளிவான அறிகுறிகளாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)