பதிவு செய்த நாள்
26 அக்2019
04:19

புதுடில்லி: கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஸ்மார்ட்போன்களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 4.9 கோடி என்ற எண்ணிக்கையை தொட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும்போது, 10 சதவீத அதிகரிப்பாகும்.
தள்ளுபடிபொருளாதார மந்த நிலை நிலவுகிறது என, சொல்லப்படும் சூழலில், ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆச்சரியமளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என்பது, கவுன்டர்பாயின்ட் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு புதிய அறிமுகங்கள், பண்டிகை கால தள்ளுபடிகள் ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்து உள்ளன.சயோமி நிறுவனம், 26 சதவீத சந்தை பங்களிப்புடன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.இதையடுத்து சாம்சங், 20 சதவீதம், விவோ, 17 சதவீதம், ரியல்மி, 16 சதவீதம், ஒப்போ, 8 சதவீதம் என்ற அளவில் உள்ளன.அறிமுகம்விலை குறைப்பு, எக்ஸ்.ஆர்., மாடல் அறிமுகம் ஆகியவை காரணமாக, ஆப்பிள் நிறுவனம் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது.பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், செப்டம்பர் காலாண்டில், ஒன்பிளஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையானதை விட, இரண்டு மடங்கு, ஒன்பிளஸ் விற்பனை அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, ஒன்பிளஸ் 7 டி, ஒன்பிளஸ் 7டி புரோ ஆகிய போன்கள், விற்பனையை அதிகரிக்க உதவியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|