இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் ...  எதற்கு வந்தார்  ஏஞ்சலா மெர்கல்? எதற்கு வந்தார் ஏஞ்சலா மெர்கல்? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
23:47

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­கம் ஆகின. கடந்த இரு மாதங்­க­ளாக, அதாவது, ஆகஸ்ட் மற்­றும் செப்­டம்­பர் மாதத்­தில், தேசிய பங்குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ 1,300 புள்­ளி­கள் உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘சென்­செக்ஸ்’ கடந்த வியா­ழ­னன்று, அதன் முந்­தைய வர­லாற்று உச்­சத்தை அதா­வது, 40,312 புள்­ளி­களை கடந்து, புதிய வர­லாற்று சாதனை உச்­ச­மாக, 40,392 புள்­ளி­களை எட்­டி­யது.

நடப்பு நிதி ஆண்­டின், இரண்­டாம் காலாண்­டுக்­கான நிறு­வ­னங்­களின் நிதி நிலை அறிக்­கை­கள் வெளி­வந்த வண்­ணம் உள்ளன. இதில், குறிப்­பிட்ட சில முக்­கிய நிறு­வ­னங்­களில், ஆதா­யம் எதிர்­பார்த்­ததை விட அதி­க­ரித்­தது. இது, பங்­குச் சந்தை உயர்­வுக்கு வழி­வ­குத்­தது.மேலும், உலக பங்­குச் சந்­தை­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­ற­மும் உயர்­வுக்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது. தேசிய பங்­குச் சந்­தை­யில் உள்ள, 11 துறை சார்ந்த குறி­யீட்டு எண்­களும் உயர்ந்து, வர்த்­த­கம் ஆகின. இதில், ஊட­கம் மற்­றும் பொதுத் துறை வங்­கி­கள் ஆகி­ய­வற்­றின் துறை குறி­யீ­டு­கள், 10 சத­வீ­தத்­துக்கு மேல் உயர்ந்­தன.

கமா­டிட்டி மற்­றும் வாக­னத் துறை குறி­யீட்டு எண்­கள், 5 சத­வீ­தத்­துக்கு மேல் உயர்ந்­தன. நிப்டி, 500 குறி­யீட்டு எண், 3 சத­வீ­தம் உயர்ந்­தது.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, தொடர்ந்து இரண்­டா­வது வார­மாக மதிப்பு உயர்ந்து வரு­வ­தும், சந்­தைக்கு சாத­க­மான போக்­குக்கு வழி­வ­குத்­தது.நாட்­டின் மிகப்­பெ­ரிய வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘மாருதி சுசூகி’யின் விற்­பனை, அக்­டோ­பர் மாதத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த, ஏழு மாதங்­க­ளாக குறைந்­தி­ருந்த விற்­பனை, அக்­டோ­ப­ரில் அதி­க­ரித்­தி­ருப்­பது, வாக­னக் துறை­யில் மீண்­டு­மொரு நம்­பிக்­கைக்கு வழி­வகுத்­துள்­ளது.

கடந்த வாரம் நடை­பெற்ற, அமெ­ரிக்க ரிசர்வ் வங்கி கூட்­டத்­தில், வட்டி விகி­தம், 0.25 சத­வீ­தம் குறைக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வின் முக்­கி­ய­மான, எட்டு துறை­கள் சார்ந்த வளர்ச்சி, செப்­டம்­பர் மாதத்­தில், 5.2 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இது கடந்த, 14 மாதங்­களில் இல்­லாத சரி­வா­கும்.
இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 11,985 புள்­ளி­கள். இதை கடக்­கும் நிலை­யில், மேலும் உயர்ந்து, வர்த்­த­க­மாக வாய்ப்­புள்­ளது. அடுத்த ரெசிஸ்­டென்ஸ், 12,075 மற்­றும் 12,180; சப்­போர்ட், 11,785 மற்­றும் 11,700.

முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)