இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் ...  எதற்கு வந்தார்  ஏஞ்சலா மெர்கல்? எதற்கு வந்தார் ஏஞ்சலா மெர்கல்? ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
23:59

சொந்த வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்­கள், வீட்­டின் அமை­வி­டம், வீட்­டுக்­க­டன் வசதி உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். இவற்­றோடு, புதி­தாக கட்­டப்­பட்டு வரும் குடி­யி­ருப்பு திட்­டங்­களை நாடு­வதா அல்­லது உட­ன­டி­யாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய, கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வதா எனும் கேள்­வி­யும் முக்­கி­ய­மாக எழ­லாம். தற்­போ­தைய சூழ­லில், கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வ­தில் உள்ள சாத­க­மான அம்­சங்­கள்:


தாம­தம் இல்லை:


கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கும் போது, குடி­யி­ருப்பு திட்­டம் தாம­த­மா­கும் அபா­யம் இருப்­ப­தில்லை.திட்­டம் முடி­ய­வும், குடி­யி­ருப்பு வச­தி­கள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வும் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­காது. பல்­வேறு கார­ணங்­க­ளால், ரியல் எஸ்­டேட் திட்­டங்­கள் தாம­த­மாக வாய்ப்­புள்ள சூழ­லில் இதுமுக்­கிய சாத­கம்.


எல்­லாம் தெளிவு:


கட்டி முடிக்­கப்­பட்ட வீடு எனில்,பய­னா­ளிக்கு எல்லா அம்­சங்­களும் தெளி­வாக இருக்­கும். வீடு, அறை­க­ளின் அளவு, பார்­க்கிங், வச­தி­கள் உள்­ளிட்ட அனைத்துஅம்­சங்­க­ளை­யும் முன்­கூட்­டியே அறிந்து கொள்­ள­லாம்.இது, வாங்­கும் முடிவை எளி­தாக்­கும் என்­ப­தால்எந்த குழப்­ப­மும்
இருக்­காது.


வாடகை செலவு:


வீட்­டுக்­க­டன் வசதி பெறும் போது, கட­னுக்­கான மாதத்­ த­வ­ணையை செலுத்த வேண்­டும். கட்­டப்­பட்டு வரும் திட்டம் எனில், மாதத் ­த­வணை மற்­றும் வாடகை இரண்­டும் கொடுக்க வேண்­டிய நிலை வரும். கட்டி முடிக்­கப்­பட்ட வீட்­டில் உடனே வசிக்­கத்­ து­வங்­க­லாம் என்­ப­தால், மாதத் ­த­வணை மட்டும் செலுத்த துவங்­க­லாம்.

ஜி.எஸ்.டி., சாத­கம்:


ஜி.எஸ்.டி., வரி குறைக்­கப்­பட்ட நிலை­யி­லும், குடி­யி­ருப்பு திட்­டங்­க­ளுக்கு உள்­ளீடு வரிக்கு ஏற்ப,ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., பொருந்­தாது
என்­ப­தால், இந்த வரியை மிச்­சம் செய்ய முடி­யும். ஆனால், கட்டி முடிக்­கப்­பட்ட வீட்­டிற்கு கூடு­த­லாக பணம் கொடுக்க வேண்­டி­யி­ருக்­க­லாம்.


வரிச்­ச­லுகை:


வீட்­டுக்­க­டன் மூலம் வீடு வாங்­கும் போது வரிச்­ச­லு­கையை பெற முடி­யும். வீட்­டுக்
க­ட­னுக்­கான மாதத் ­த­வ­ணை­யின் வட்டி தொகை, வரு­மான வரிச்­ச­லு­கைக்கு உரி­யது. மேலும், முதல் முறை வீடு வாங்­கு­ப­வர்­க­ளுக்­கான சலு­கை­யும் இருக்­கிறது. கட்டி
முடிக்­கப்­பட்டு, வீட்­டில் வசிக்­கும் போதே இந்த சலு­கை­களை பெற முடி­யும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)