இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் இந்தியா- – சீனாவளர்ச்சி அதிகரிக்கும் ... அமேசான், பிளிப்கார்ட்டுக்கு எதிராக போராட்டம் அமேசான், பிளிப்கார்ட்டுக்கு எதிராக போராட்டம் ...
எதற்கு வந்தார் ஏஞ்சலா மெர்கல்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
00:10

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லின் சமீபத்திய இந்திய பயணம், பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது; 20 ஒப்பந்தங்களில், இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை மிகவும் சுவாரசியமானது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக, இந்தியா வந்தார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். இந்தியா – ஜெர்மனி இடையே இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாக, மெர்கல் பயணம் அமைந்தது. இந்தியாவோடு, 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


இவற்றில் முக்கியமானவை, நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, கல்வி, திறன் மேம்பாடு, இணைய பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள். மேலும், துாய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்கு வதிலும், அவற்றை பயன்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் நாடு ஜெர்மனி. அதனால், மின்சார வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பம், பொலிவுறு நகரங்கள், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, கடற்கரை நிர்வாகம், நதிகளைத் துாய்மைப்படுத்துவது, காலநிலை மாற்றம் ஆகிய விஷயங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மெர்கல் தெரிவித்தார்.என்ன பேசப்பட்டன; என்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்பது பின்விளைவுகள். முதலில், ஏன் இத்தகையதொரு பயணம்?

பயணம் ஏன்?

காரணம், எளிமையானது; ஜெர்மனியின் தேவை. அதாவது, இந்தியாவைப் போலவே, ஜெர்மனியிலும் பொருளாதார மந்த நிலை. இங்குள்ளதைப் போன்றே, ஜெர்மனியில் உள்ள ஆட்டோமொபைல் துறை, வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. முன்பு, ஐரோப்பாவில் ஜெர்மனி மிகவும் வலிமையான நாடாக கருதப்பட்டு வந்தது. பல்வேறு ஐரோப்பிய யூனியன் சார்ந்த பிரச்னைகளில், ஏஞ்சலா மெர்கல் அழைக்கப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட்டார்.



தற்போது சூழ்நிலை வேறு. அதாவது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து போவதால், பிரான்சுக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. மெர்கல் சார்ந்த கட்சி அளவிலும் அவருக்குத் தளர்ச்சி. அடுத்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அவரது தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடையே கூட மோதல்கள் வலுத்து வருகின்றன.


இன்னொரு புறம், ஜெர்மன் நாடு எப்போதும், பிற நாடுகளோடு இணைந்து செயல்படுவதையே விரும்புகிறது. முன்பு ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, அமெரிக்கா என்று பலருடனும் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, தன் பொருளாதாரத்தை வளர்த்து வந்தது.தற்போது இங்கேயெல்லாம் ஒருவித மோதல்கள் ஏற்பட்டுவிட்டன. சீனா மட்டும், ஜெர்மனியோடு தொடர்ந்து உறவை வளர்த்துக் கொண்டே வந்தது.



ஐரோப்பிய யூனியன் மொத்தமும் குறிப்பாக, ஜெர்மனியும், சீனாவின் பொருளாதார முன்னெடுப்புகளை ஏற்றுக் கொண்டிருந்தன; சீன சந்தையை வாய்ப்பாகவும் கருதின.ஆனால், சீனாவுக்கு வேறு கணக்கு இருக்கிறது. 2049க்குள், உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சக்தியாக வளர வேண்டும் என்று, அது முரட்டுத்தனமாகச் செயல்படுகிறது. ஜெர்மனிக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை.


விளைவு, சீனாவை விட்டு விட்டு, வேறு ஆசிய நாடுகளோடு உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இதனால் தான், மெர்க்கல் இந்தியாவுக்கு வருவதற்கு முன், இந்தியாவுக்கான ஜெர்மன் துாதர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவை, ‘ஸ்திரத்தன்மையின் அச்சாணி’ என்று வர்ணித்தார்.அதேபோல், ஜெர்மனியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், ‘சீனாவை மட்டுமே நம்பி நம் ஆசிய கொள்கையை உருவாக்குவது ஆபத்தானது. ‘நம்மைப் போலவே மதிப்பீடுகளிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ளது இந்தியா’ என்று தெரிவித்துள்ளார்.


மெர்கல்லுக்கு அடுத்து உள்ள துணைத் தலைவரான ஜான் வாடேபுள், ‘‘ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும், சீனா மீது அதிக கவனம் செலுத்துகிறோம். ‘‘இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம். அது, நம் இயற்கையான பங்காளி,” என்று தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.இந்தப் பின்னணியில் தான், மெர்கல் இந்தியப் பயணம் மேற்கொண்டார்.


இரு நாடுகளிடையே இருக்கும் வர்த்தகம், 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. இந்தியாவின் அன்னிய முதலீட்டில், ஏழாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி. 1,700 ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அதில், 600க்கு மேற்பட்டவை பொறியியல் துறை நிறுவனங்கள். அதேபோல், 600 இந்தோ – ஜெர்மன் கூட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஐ.டி., பயோடெக்னாலஜி, மருந்து உற்பத்தி துறையில், 200 இந்திய நிறுவனங்கள் ஜெர்மனியில் இயங்கி வருகின்றன.


இந்நிலையில், ஜெர்மனிக்கு, இந்தியா மிகவும் முக்கியமான சந்தை. இந்நேரத்தில் எத்தகைய முதலீடுகள் வந்து சேர்ந்தாலும், அது வரவேற்கத்தக்கது தான் என்று இந்தியாவும் காத்து இருக்கிறது.‘ப்ளூ கார்டு’புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வளங்குன்றா வளர்ச்சி, தொழிற்பயிற்சி ஆகிய துறைகளில் ஜெர்மனி ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறது. இத்துறைகளில் பயிற்றுவிக்க இந்திய பணியாளர்களையும், ஆசிரியர்களையும் ஜெர்மனி அழைக்கிறது. குறிப்பாக, சட்டம் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஜெர்மனியில் காத்திருக்கிறது.



இளைஞர்களை ஈர்ப்பதிலும் ஜெர்மனி முன்னணியில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், ‘ப்ளூ கார்டு’ திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருவது ஜெர்மனி தான். அதாவது, நிரந்தரமாக தங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது ஜெர்மனி தான்.புதிய தொழில்நுட்பங்களைக் கற்று வந்து, இந்தியாவில் சொல்லிக் கொடுக்கவும் வாய்ப்புகள் திறந்துள்ளன. உறவு என்பது இரு தரப்பிலும் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். மெர்க்கல்லின் அமைதியான பயணம், இரு நாட்டுக்கும் பயனுடையதே!

ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)