பதிவு செய்த நாள்
10 நவ2019
23:43

பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பாலிசிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை, எல்.ஐ.சி., நிறுவனம் வழங்குகிறது.
உரிய நேரத்தில், பிரீமியம் தொகை செலுத்தப்படவில்லை எனில், பாலிசி காலாவதியாகிவிடும். இவ்வாறு காலாவதியான பாலிசிகளை, அபராதத்துடன் பிரிமியம் தொகை செலுத்தி, புதுப்பித்துக் கொள்ளலாம்.எனினும், கடைசியாக பிரீமியம் தொகை செலுத்திய இரண்டு ஆண்டுகளுக்குள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், புதுப்பித்துக்கொள்வது சாத்தியம் இல்லை. 2014ம் ஆண்டுக்கு பின்எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு இது பொருந்தும். இந்நிலையில், காலாவதியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பாலிசிகளையும் புதுப்பித்துக்கொள்ளலாம் என, ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி., அண்மையில் அறிவித்துள்ளது.
காலாவதியாகி இரண்டு ஆண்டு களுக்கு மேல் ஆன, இதற்கு முன் புதுப்பித்துக் கொள்ள
அனுமதி அளிக்கப்படாத பாலிசிகளையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, எல்.ஐ.சி.,
தெரிவித்துள்ளது.இதையடுத்து, 2014க்கு பின் எடுக்கப்பட்ட பாலிசிகளை, பிரீமியம் செலுத்த தவறியதில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.யூலிப் வகை பாலிசிகள் என்றால், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|