மியூச்சுவல் பண்டு முதலீடு  7.4 சதவீதம் அதிகரிப்பு மியூச்சுவல் பண்டு முதலீடு 7.4 சதவீதம் அதிகரிப்பு ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்­கு­களில் முத­லீடு செய்­யும் முன் தெரிந்து கொள்ள வேண்­டி­யவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2019
23:47

சரா­சரி முத­லீட்­டா­ளர்­களை பொருத்­த­வரை பங்கு முத­லீட்­டின் பலனை பெற, மியூச்­சு­வல் பண்ட் முத­லீடே சிறந்த வழி. எனி­னும், பங்­குச்­சந்­தை­யில் ஆர்­வம் உள்ள பலர், நேர­டி­யாக பங்­கு­களை வாங்க விரும்­ப­லாம். நேரடி பங்கு முத­லீடு என்­பது, எல்­லோ­ருக்­கு­மா­னது அல்ல என்­ப­தோடு, ஆழ­மான ஆய்வு தேவைப்­ப­டு­வது. நேரடி பங்கு முத­லீட்­டில் ஈடு­ப­டு­வ­தற்கு முன், அறிந்­தி­ருக்க வேண்­டிய அம்­சங்­கள்:

பங்­கு­கள் தேர்வு:


பங்கு முத­லீட்­டில் சரி­யான பங்­கு­களை தேர்வு செய்­வது முக்­கி­யம். ஒரு­வர் தனக்கு தெரிந்­த­வற்­றில் முத­லீடு செய்ய வேண்­டும் என, வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. எனவே,ஆர்­வம் உள்ள துறை­களை தொடர்ந்து கவ­னித்து,அத­ன­டிப்­ப­டை­யில் நல்ல பங்­கு­களை தேர்வு செய்ய வேண்­டும்; அதே நேரத்­தில் பர­வ­லாக்­க­மும் முக்­கி­யம்.

பங்கு வெளி­யீடு:


புதிய முத­லீட்­டா­ளர்­கள், ஐ.பி.ஓ., எனகுறிப்­பி­டப்­படும், பொது பங்கு வெளி­யீடு மூலம்
பங்­கு­களைவாங்­க­லாம். பங்கு வெளி­யீடு தொடர்­பான தக­வல்­கள்அடிப்­ப­டை­யில், நிறு­வன பங்கு ஏற்­றதா என, தீர்­மா­னிக்­க­லாம். ஆனால், இந்­தி­யா­வில் எதிர்­பார்த்த பலன் தந்த பங்கு
வெளி­யீ­டு­கள் குறைவு என, கரு­தப்­ப­டு­கிறது.

ஏற்ற, இறக்­கம்:


பங்­குச்­சந்தை ஏறு­மு­கத்­தில் இருக்­கும் போது,எல்­லாம் உற்­சா­கம் அளிக்­கும். ஆனால், சந்தை சரி­யும் போது, வலி­யும், வேத­னை­யும் உண்­டா­க­லாம். எனவே, சந்­தை­யின்ஏற்ற, இறக்க போக்கை புரிந்து கொள்ள வேண்­டும்.இதற்கு கார­ண­மான பொரு­ளா­தார அம்­சங்­க­ளை­யும் மன­தில் கொண்டு, பங்­கு­களை தேர்வு செய்ய வேண்­டும்.


ஆய்வு தேவை:

பங்­கு­களை தேர்வு செய்ய ஆய்­வும், அல­ச­லும்முக்­கி­யம். குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தின்
அடிப்­படை அம்­சங்­களை அலசி ஆராய வேண்­டும். சந்தை சார்ந்த மற்ற தக­வல்­க­ளை­யும்
கவ­னிக்க வேண்­டும். பங்­கு­களை அல­சு­வ­தற்குபின்­பற்­றப்­படும், ‘டெக்­னி­கல் அனா­ல­சிஸ்’ போன்றவழி­க­ளை­யும் அறிந்­தி­ருக்க வேண்­டும்.


எப்­படி வாங்­கு­வது?


பங்­கு­களில் பரி­வர்த்­தனை செய்­வ­தற்­கான வழி­க­ளை­யும் அறிந்­தி­ருக்க வேண்­டும். இதற்கு என,இணை­ய­த­ளங்­கள் மற்­றும் செய­லி­கள் இருக்­கின்­றன என்­றா­லும், புரோக்­கர் கட்­ட­ணம், பரி­வர்த்­தனை கட்­ட­ணம் போன்­ற­வற்றை அறிந்­தி­ருக்க வேண்­டும். பங்கு பரிந்­து­ரை­களை
கையா­ளத் ­தெ­ரிந்­தி­ருப்­ப­தும் அவ­சி­யம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)