பதிவு செய்த நாள்
10 நவ2019
23:51

மற்ற நிதி இலக்குகளுக்கு திட்டமிடுவது போலவே, பண்டிகை கால கொண்டாட்டத்திற்கான நிதியை உருவாக்கி கொள்வது நல்லது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக முடிவடைந்து, அதன் நினைவுகள்
மனதில் இனிமையாக தங்கியிருப்பதை உணரலாம். பண்டிகை காலத்தில் விற்பனை சூடு பிடித்தது, பொருளாதார மந்த நிலை சூழலில் நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
இதனிடையே, பண்டிகையின் போது திட்டமிடாமல் செலவு செய்திருந்தால்
அல்லது எதிர்பாராத செலவுகளில் ஈடுபட்டிருந்தால், அதன்
விளைவுகளையும் இப்போது உணரத்
துவங்கியிருக்கலாம். பண்டிகை
கால செலவுகள் பட்ஜெட்டை பதம் பார்க்கலாம் அல்லது கடன் சுமையை
உண்டாக்கி இருக்கலாம்.
கிரெடிட் கார்டு வசதியை மிகையாக பயன்படுத்தி இருந்தால் அல்லது எளிதான கடன்
வசதியை நாடியிருந்தால், அவற்றுக்கான மாதத் தவணையை செலுத்தியாக வேண்டும்.
கடன் சுமையில் கவனம்இத்தகைய பண்டிகைக்கு பிந்தைய விளைவுகளின் தாக்கத்தை
நீங்களும் உணர்ந்திருந்தால், இதிலிருந்து மீள்வதற்கான வழிகளைபின்பற்றுவதே சரியாக இருக்கும்.
நிதி நிலையை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கான முதல் வழி, கடன் சுமையில் இருந்து மீள்வதற்கு முன்னுரிமை அளிப்பதாகும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பண்டிகை கால செலவுகளை மேற்கொண்டிருந்தால், நிலுவையில் உள்ள தொகையை பைசல் செய்ய
திட்டமிட வேண்டும்.குறைந்தபட்ச தொகையைமட்டும் செலுத்துவது போதுமானதுஅல்ல.
எனவே, நிலுவையில்உள்ள கடனை அடைக்க திட்டமிட வேண்டும். தேவை எனில், குறைந்த வட்டியிலான கடன் வசதியைநாடவும் தீர்மானிக்கலாம்.ஒன்றுக்கு
மேற்பட்ட இடங்களில் கடன் வாங்கியிருந்தால், அதிக வட்டி கடனை
முதலில் அடைக்க வேண்டும். கடன் சுமை, வழக்கமான முதலீடுகளை
பாதிக்காமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதே
நேரத்தில், மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுவதை தவிர்க்க,
செலவுகளை ஆய்வு செய்து, வீண் செலவுகளை குறைக்க வேண்டும். வெளியே
சாப்பிடுவது போன்ற செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். போனஸ் தொகை கிடைத்து இருந்தால், கடன் அடைக்க அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு, பண்டிகை கால செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும். செலவுகள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன
என்பதை கண்டறிய வேண்டும்.இதன் மூலம், பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு எவ்வளவு
தொகை தேவை என்பதை தீர்மானிக்கலாம்.
திட்டமிடல்
சுற்றுலா
பயணம் உள்ளிட்ட மற்ற வகை இலக்குகளுக்கான நிதியை உருவாக்குவது
போலவே, பண்டிகை கால நிதியை உருவாக்குவதும் அவசியம் என்பதை, இதன்
மூலம் உணர்ந்து கொள்ளலாம். பார்த்தவுடன் மேற்கொள்ளும் செலவுகளை
தவிர்க்கவும் இது உதவும்.
பண்டிகை கால நிதிக்காக திட்டமிட்டு சேமித்தால், கடன் சுமை போன்ற பாதிப்புகளில்
சிக்கி கொள்ளாமல் இருக்கலாம். செலவுகளை ஆய்வு செய்யும் போது, பண்டிகைக்கு என்று
எவ்வளவு தொகை தேவைப்படலாம் என, தெரிந்திருக்கும். அதற்கேற்ப,
பண்டிகை
காலத்திற்கான நிதி இலக்கை அமைத்துக்கொண்டு திட்டமிட
வேண்டும். இந்த இலக்கு, மற்ற நிதி இலக்குகளுடன் பொருத்தமாக
இருப்பதும் அவசியம்.பண்டிகை கால நிதி அளவை முடிவு செய்தவுடன், அதற்காக சேமிக்கத் துவங்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|