பதிவு செய்த நாள்
10 நவ2019
23:55

கச்சா எண்ணெய்
கடந்த
சில வாரங்களாகவே, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமாகி
வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே, 16 மாதங்களாக நடந்து வந்த
வர்த்தக மோதலை
முடிவுக்கு கொண்டு வரும் வகையில், உடன்படிக்கை
மேற்கொள்ள, சீனா தயாராக
இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும்
இதை ஏற்றுக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. 16
மாதங்களாக, தொடர்ந்து பலமுறை இறக்குமதி வரி
அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை முழுவதுமாக விலக்கிக்கொள்ள
முடியாது என்பதால், படிப்படியாக இறக்குமதி வரி குறைக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பும், சந்தையில் நிலவுகிறது.
இதையடுத்து, இரு
நாடுகளுக்கும் இடையே சுமுக நிலை ஏற்பட்டு, அதன் காரணமாக, பொருளாதார
வளர்ச்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி
பொருளாதார வளர்ச்சி ஏற்படும்பட்சத்தில், தொழில் துறைக்கான
மூலப்பொருளான கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் என்ற
கண்ணோட்டத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது.உலக
அளவில், கச்சா எண்ணெயை பொருத்தவரை உற்பத்தியில், அமெரிக்கா
முதலிடம் வகிக்கிறது. இறக்குமதியில், சீனா முதலிடம் வகிக்கிறது.
எனவே, இந்த இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக வர்த்தக உறவு, பொருளாதார
வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதில்சந்தேகமில்லை.
சீனாவின்
கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 11.5 சதவீதம்
அளவுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இதுவும்
கச்சா எண்ணெய் விலை உயர, ஒரு காரணமாகவும் அமைந்தது. வளைகுடா
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், அடுத்த மாதம், 5
மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கடந்த ஜூன் மாதம், இந்த
கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், எண்ணெய் உற்பத்தியை
குறைப்பது என
முடிவெடுத்தன. இதன் மூலம், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து, விலை
சரிவை கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டன. அத்துடன், இந்த உற்பத்தி
குறைப்பை, உறுப்பு நாடுகள் சரிவர பின்பற்றுகின்றனவா என்பதை
கண்காணிக்க, ஒரு குழுவும்
அமைக்கப்பட்டது.
இந்த உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது.
இத்தகைய
சூழலில், அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகள் குறித்து, சந்தையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சமீப
காலமாகவே, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது,
ஷெல்
எண்ணெய் உற்பத்தியுடன் கணக்கிட்டால், உலக அளவில், கச்சா
எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.இரண்டாவதாக,
சவுதி அரேபியாவும், மூன்றாவதாக,
ரஷ்யாவும் உள்ளன.
அமெரிக்காவில் இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை,
தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. 2015 ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கையேஅதிகமாகும்.
சவுதி
அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் மொத்த உற்பத்தி,
ஒட்டுமொத்த உலகின் நுகர்வுத் தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி
செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
சர்வதேச
சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி கடந்த வாரம் விலை சரிந்து
வர்த்தகம் ஆகின. இந்த விலை சரிவு, உள்நாட்டு பொருள் வாணிப சந்தை
மற்றும் ஆபரண சந்தையிலும்
பிரதிபலித்தது. கடந்த, 2016ம் ஆண்டு
நவம்பர் மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட வார அளவிலான அதிகப்படியான
சரிவு இதுவேயாகும்.
இதற்கு முன் நாம் குறிப்பிட்டிருந்தது போல,
கடந்த சில மாதங்களாக, தங்கம் விலை
உயர்வுக்கு முக்கிய காரணமாக
இருந்தது, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தக மோதல்
ஆகும். இரு நாடுகளும் இறக்குமதிக்கான வரி விதிப்பை போட்டி போட்டுக்
கொண்டு அதிகரித்தன.இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்புக்குள்ளாகி, பொருளாதார சரிவு ஏற்பட்டது.
இச்சூழலில்,முதலீட்டாளர்கள், தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வந்தனர். இதன் விளைவாக, கடந்த ஜூன்மாதம் முதல், செப்டம்பர் மாதம் வரை விலை உயர்ந்து வந்தது. செப்டம்பரில், ஆண்டின் உச்ச விலையை அடைந்தது.
இதற்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் சற்று சரிவு கண்டது. பின், இம்மாதம் ஆரம்பம் முதலே விலை சரிந்து வருகிறது.பொதுவாகவே,
தங்கம் விலையின் ஏற்ற இறக்கங்கள் அதன் தேவையை விட, பொருளாதார
காரணிகள், அசாதாரண சூழல்கள் மற்றும் அமெரிக்க நாணயத்தின் மதிப்பு
ஆகியவற்றை பொருத்தே அமைகின்றன.
தங்கம் ஒரு உலோகப் பொருள்
என்பதற்கு மேலாக, அது ஓர் முதலீட்டு பொருளாகவும், நாணயமாகவும்,
மறுமதிப்பு உள்ளதாகவும் இருப்பதால், இதன் மதிப்பு சந்தையில் ஏற்படும் நிகழ்வுகளை பொருத்தேஅமைகிறது.இந்த
ஆண்டில், இதுவரை, 14 சதவீதம் வரை விலை உயர்ந்திருந்தது. கடந்த
வாரத்தில் இது, 3 சதவீத சரிவைக் கண்டது. வரும் நாட்களிலும்
தங்கம்
விலையில் அதிகப்படியான ஏற்றத்தாழ்வுகள் நிகழ வாய்ப்புள்ளது.
மேலும் வர்த்தக மோதல் முழுமையாக முடிவுக்கு வரும் பட்சத்தில்,
தங்கத்தின் விலையில் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.இந்த
ஆண்டில், அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து 3வது முறையாக, 0.25
சதவீதம் வட்டியை குறைத்துள்ளது. வட்டி விகிதமும் தங்கமும்,
எதிர்மறையான போக்கை கொண்டவை. வட்டி விகிதம் உயரும்போது, அரசு
மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும்
என்பதால், அவற்றில் முதலீடு அதிகரிப்பது
வாடிக்கையாகும்.
மாறாக,
வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள், அதிக லாபமீட்டும்
பொருட்கள் மீது, முதலீடு செய்வர். இதில், தங்கத்தின் மீதான முதலீடு
முதலிடம் வகிக்கிறது.
செம்பு
கடந்த வாரம், செம்பு விலை
சரிந்து வர்த்தகமாகியது. உலகில் உள்ள பெரும்பாலான
முன்னணி
நாடுகளின் பங்குச் சந்தை குறியீட்டு எண்களும், கடந்த வாரம் வரலாற்று
உச்சத்தை அடைந்து வர்த்தகமாகி வந்தன. இதன் காரணமாக, பொருளாதார
வளர்ச்சி
அதிகரிக்கும், அதனால் தேவை அதிகரிக்கும் என்ற
எதிர்பார்ப்பில் விலை உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதலால், இரு நாடுகளும்,
இறக்குமதிக்கான வரி விதிப்பை, போட்டி போட்டு அதிகரித்தன. தற்போது,
படிப்படியாக
இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால்,
பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, தொழிற்சாலை மூலப்பொருட்களின் தேவை
அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், செம்பு விலை உயர்ந்து
வர்த்தகம் ஆனது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|