பதிவு செய்த நாள்
12 நவ2019
00:48

புதுடில்லி:தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், உலகத் தரத்திலான மருத்துவ வசதி குறைந்த விலையில் கிடைப்பதற்கு உதவும் வகையிலும், இந்த பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆலைகளை எளிதில் அமைத்து, உற்பத்தியில் ஈடுபடும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.இந்த பூங்காக்களில் ஆலைகள் அமைக்கப்படுவதால், இறக்குமதி வரி குறைவதுடன், தரமான மருத்துவ சோதனை வசதிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் உதவுவதாக இருக்கும்.
நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லரை சந்தை, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். ஆசியாவில், இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய சந்தையாக இருந்த போதிலும், உள்நாட்டில் தொழிற்சாலை மிகவும் குறைவாகும்.பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம், இறக்குமதி செய்யும் நிலையில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|