பதிவு செய்த நாள்
12 நவ2019
00:49

புதுடில்லி:எந்தெந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்கலாம் என்பதை கண்டறியுமாறு, மத்திய வர்த்தக அமைச்சகம், அனைத்து அமைச்சகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் இறக்குமதி செலவினங்களை குறைக்கும் வகையில், அமைச்சகம் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் இறக்குமதி கடந்த நிதியாண்டில், 9 சதவீதம் அதிகரித்து, 36.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 33.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், வர்த்தக அமைச்சகம், கடந்த பல மாதங்களாக தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில், முக்கியமான பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.அதிக இறக்குமதி, வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கிறது. இது, நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக இறக்குமதி, அன்னிய செலாவணி மதிப்பையும் பாதிக்கிறது.எனவே, உள்நாட்டு தயாரிப்பை அதிகரிப்பது குறித்து, அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|