பதிவு செய்த நாள்
12 நவ2019
23:36

புதுடில்லி:அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், இம்மாதத்தின் முதல் வாரத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து உள்ளன.இது குறித்து, புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாவது:
அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், இம்மாதம், 1ம் தேதியிலிருந்து, 9ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம், 6,433 கோடி ரூபாயை பங்குச் சந்தையிலும், 5,673 கோடி ரூபாயை கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளன.இதையடுத்து, இவ்வகையில் செய்யப்பட்டுள்ள மொத்த முதலீடு, 12 ஆயிரத்து, 106 கோடி ரூபாய்.கடந்த இரு மாதங்களாக முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், இம்மாதமும் முதலீடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கடந்த அக்டோபரில் அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் மொத்தம், 16 ஆயிரத்து, 465 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இது, செப்டம்பர் மாதத்தில், 6,558 கோடி ரூபாயாக இருந்தது.பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளால், சந்தையில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டின் பங்குச் சந்தைகள், புதிய உயரங்களை தொட்டன. இது போன்ற காரணங்களால், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து வருகின்றன என்கின்றனர், நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|