பதிவு செய்த நாள்
12 நவ2019
23:39

புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது, மீண்டும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரியான நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை அதிகரித்து காட்ட, தவறான வழிகளை மேற்கொண்டதாக, ‘உண்மை விளம்பிகள்’ என்ற அடையாளத்துடன், ஒரு சிலர் புகார் கடிதங்களை அனுப்பினர்.இது, வணிக உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அந்த அலை ஓய்வதற்குள், அடுத்ததாக ஓர் அலை எழுந்துள்ளது.
இதுவும், ‘உண்மை விளம்பி’ எனும் அடையாளத்துடன், சுய அடையாளத்தை மறைத்து, ஊழியர் ஒருவர், சலீல் பரேக் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நிறுவன தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், சிறு நிறுவனங்கள் பலவற்றில் பரேக் முதலீடு செய்திருப்பதாகவும், அதை பாதுகாக்க, மும்பையில் இருந்தே பணியாற்றுவதாகவும், இது, நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்து, ஓராண்டு, எட்டு மாதங்கள் ஆன பின்னரும், தலைமையகமான பெங்களூரில் இருந்து பணியாற்றாமல், மும்பையில் இருந்து செயல்படுவதை ஏன் நிர்வாகம் கேட்கவில்லை என, புகார் எழுப்பியுள்ளார்.பரேக்கின் மும்பை –- பெங்களூரு விமான பயணத்துக்கு, பல லட்சம் ரூபாயை அலுவலக நிதியிலிருந்து செலவழித்திருப்பதாகவும் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|