பதிவு செய்த நாள்
12 நவ2019
23:45

மும்பை:தங்க நகை ஏற்றுமதி, அக்டோபரில், 8.50 சதவீதம் அதிகரித்து, 7,578 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 4.35 சதவீதம் அதிகரித்து,
51 ஆயிரத்து, 3 கோடி ரூபாயாக இருந்தது.இருப்பினும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மதிப்பு, அக்டோபரில், 5.49 சதவீதம் அளவுக்கு குறைந்து, 24 ஆயிரத்து, 583 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
ஏற்றுமதியில் பாதிப்பு
கடந்த ஆண்டு அக்டோபரில் இதுவே, 26 ஆயிரத்து, 10 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்தக போரால், தேவை குறைந்து ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது தான்.மேலும், ஹாங்காங் போராட்டம், மத்திய கிழக்கு நாடுகளில் வாட் வரி அமலானது உள்ளிட்டவையும், ஏற்றுமதி குறைந்ததற்கான
காரணங்களாகும்.
கடந்த ஏப்ரல் முதல், அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 5.14 சதவீதம் குறைந்து, 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதுவே கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு, 1.66 லட்சம் கோடி ரூபாயாக
அதிகரித்திருந்தது.
ரூ.1.04 லட்சம் கோடி
நறுக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி, மதிப்பீட்டு மாதத்தில், 18.35 சதவீதமாக சரிந்துள்ளது; இதன் மதிப்பு, 13 ஆயிரத்து, 875 கோடி ரூபாய். இதுவே, கடந்த ஆண்டில், 16 ஆயிரத்து, 993 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 17.42 சதவீதம் குறைந்து, 85 ஆயிரத்து, 932 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், வைரத்தின் ஏற்றுமதி, 1.04 லட்சம் கோடி
ரூபாயாக அதிகரித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|