பதிவு செய்த நாள்
12 நவ2019
23:48

புதுடில்லி:நடப்பு
நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதாவது
ஜி.டி.பி., 5 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கை, நாட்டின்
ஜி.டி.பி., இதற்கு முன், 6.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த
நிலையில், தற்போது அதை குறைத்து, 5 சதவீதமாக இருக்கும் என
தெரிவித்துள்ளது.இரண்டாவது காலாண்டில், வாகன விற்பனையில்
சரிவு, முக்கிய
துறைகளின் வளர்ச்சி பாதிப்பு, கட்டுமானம் மற்றும்
உள்கட்டமைப்பில் குறைந்துபோன
முதலீடுகள் ஆகியவற்றின்
காரணமாக, ஜி.டி.பி., வளர்ச்சி, 4.2 சதவீதமாக சரிவடைய வாய்ப்பு
இருப்பதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், பொருளாதார ஆராய்ச்சி
துறையின்
ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார
வளர்ச்சியை துாண்டுவதற்காக, ரிசர்வ் வங்கி, அதன் டிசம்பர் மாத நிதிக்
கொள்கை கூட்டத்தில், வட்டியை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்கும்
எனவும் தெரிவித்துள்ளது.முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி, ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதற்கிடையே,
சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கியும், நாட்டின் வளர்ச்சி,
இரண்டாவது காலாண்டில், முதல் காலாண்டில் இருந்த, 5 சதவீதத்தை விட
குறைவாக இருக்கும் என
தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|