பதிவு செய்த நாள்
13 நவ2019
23:28

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ அறக்கட்டளையின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நிடா அம்பானி, அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற, ‘மெட்ரோபாலிட்டன்’ கலை அருங்காட்சியகத்தின் நிர்வாகக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, இந்த மதிப்பு மிக்க கலை அருங்காட்சியகத்தின் கவுரவ அறங்காவலராக நிடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அருங்காட்சியகத்தின், 149 ஆண்டு கால வரலாற்றில், அறங்காவலராக தேர்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவர் தான்
.‘தி மெட்’ என அழைக்கப்படும், தி மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம், அமெரிக்காவின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் என்பதோடு மட்டுமின்றி, அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.
இது குறித்து, அருங்காட்சியகத்தின் தலைவர் டேனியல் பிராட்ஸ்கை கூறியதாவது:நிடா அம்பானி, இந்திய கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் எடுத்துள்ள உண்மையான அர்ப்பணிப்பு காரணமாகவும், இந்த அருங்காட்சியகத்துக்கு அவர் கொடுத்த ஆதரவுக்காகவும் அவரை நிர்வாகக் குழுவுக்கு தேர்ந்தெடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|