பதிவு செய்த நாள்
13 நவ2019
23:29

புதுடில்லி:நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, நான்காவது மாதமாக, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 6 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு, 45 ஆயிரத்து, 156 கோடி ரூபாயாக உள்ளது.இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில், 48 ஆயிரத்து, 67 கோடி ரூபாயாக இருந்தது.நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தக ஏற்றுமதியில், பொறியியல் ஏற்றுமதி, 25 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக, தேவைகள் குறைந்ததன் விளைவாக, நாட்டின் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால், பொறியியல் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில், 6 சதவீதத்துக்கும் மேலாக சரிவை கண்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் மே மாதத்தை தவிர்த்து, அனைத்து மாதங்களிலும் பொறியியல் ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|