பதிவு செய்த நாள்
17 நவ2019
03:09

மும்பை: அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாதம், 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்திய மதிப்பில், 32.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாதம், 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இருப்பு, 44 ஆயிரத்து, 781 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில், 352 கோடி ரூபாய் அதிகரித்து, 44 ஆயிரத்து, 610 கோடி டாலராக உயர்வை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த அதிகரிப்புக்கு, மொத்த இருப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் அதிகரித்தது காரணமாக அமைந்தது.மதிப்பீட்டு மாதத்தில் வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு, 217 கோடி டாலர் உயர்ந்து, 41 ஆயிரத்து, 583 கோடி டாலராக அதிகரித்தது.மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு, 44.3 கோடி டாலர் அதிகரித்து, 2,691 கோடி டாலராக உள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|