பதிவு செய்த நாள்
17 நவ2019
03:11

புதுடில்லி: ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, ‘பான்’ எனும் நிரந்தர கணக்கு எண்ணை தவறாக குறிப்பிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். ஆவணங்களில், தவறான பான் எண்ணை சமர்ப்பித்தால், வருமான வரிச் சட்டம் – 1961ல், பிரிவு, 272பி விதியின் படி, வருமான வரித்துறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
கட்டாயம்வருமான வரி தாக்கல் அல்லது குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, பான் எண்ணையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இவற்றில் தவறாக பான் எண்ணை குறிப்பிட்டால், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.வருமான வரித் துறையின், 20 படிவங்களில், பான் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்கை துவங்குவது, வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது, மியூச்சுவல் பண்டுகளை வாங்குவது உள்ளிட்ட பலவற்றுக்கு பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஒருவருடைய பான் எண், அவரது ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும். எண் மற்றும் எழுத்துகள் கொண்ட இந்த பான் எண், வீடு மாறுவது உள்ளிட்ட எந்த மாற்றங்கள் செய்தாலும் மாறாமல் அதுவே தொடரும்.ஒருவேளை, பான் கார்டை தொலைத்து, அதன் நம்பரையும் மறந்துவிட்டால், ஆதார் அட்டை விபரங்களை வழங்க முடியும். ஆனால், ஆதார் எண்ணை தவறாகக் கொடுத்தாலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும்.
ஒருவேளை ஒருவரால் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய இரண்டையும் ஆவணங்களில் வழங்க முடியவில்லை என்றால், அப்போதும், 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியது வரலாம்.அப்போது, வருமான வரி வரம்புக்குள் வராமலிருந்தால், படிவம் – 60ஐ சமர்ப்பிக்கலாம்.அனுமதி கிடையாதுஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது.ஒருவர் தன் பெயரிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை வைத்திருப்பது தெரிய வந்தால், அவருக்கும், வருமான வரி சட்டம் – 1961, பிரிவு, 272பி அடிப்படையில் அபராதம் விதிக்கப்படலாம்.ஒருவேளை ஒருவர், இரண்டு பான் அட்டை வைத்திருந்தால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஒரு அட்டையை சமர்ப்பித்து விடுவது நல்லது.டிசம்பர் 31ம் தேதிக்குப் பின், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என, வருமான வரித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|