பதிவு செய்த நாள்
18 நவ2019
05:12

கடந்த, 2012ம் ஆண்டை, மீண்டும் நினைவுகூரும் நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. 2012ம் ஆண்டிற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில் தான் இது போன்ற மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எதிர்கொண்டது.
மிகத் தீவிரமான பொருளாதார வீழ்ச்சியாக அந்த காலகட்டம் கருதப்பட்டது. நாட்டில் சேமிப்பு குறையத் துவங்கியது. அரசு முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி குறியீடுகளை குறைத்து மதிப்பிட முடிவு செய்தன. வருங்காலத்தைப் பற்றிய தெளிவு இல்லாத சூழலில், பங்கு சந்தையை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் துவங்கினர். அனைவரது முதலீட்டு கவனமும், வைப்புக் கணக்கு போன்ற முதலீட்டுத் தேர்வுகளின் மீது குவிந்தன. வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்த சூழ்நிலை, இந்த போக்கை மேலும் வலுவடையச் செய்தது.
குறைப்பு
ரிசர்வ் வங்கியின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள், 2013 – 14ம் ஆண்டிற்கு, 5 சதவீதத்தை விட குறைவாகவும், 2014 – -15ல், 5.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.முதல் பார்வையில், பங்கு முதலீட்டிற்கு முற்றிலும் சாதகமற்ற சூழலாகவே இந்த பொருளாதார காலகட்டம் தோன்றும். இத்தகைய சூழலில், பங்குச் சந்தையில் நம்பிக்கை வைக்க வெகு சில முதலீட்டாளர்களே தயாராக இருந்தனர். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த காலகட்டத்தில் தான், 40 ரூபாயில் இருந்து, 67 ரூபாய் வரை அதிவேகமாக சரிந்தது. ஆனால், அதன் பின் நடந்த பொருளாதார மாற்றங்கள் மீண்டும் வளர்ச்சியை திரும்பச் செய்தன.
இப்போது, மீண்டும் உலகப் பொருளாதார வளர்ச்சி குறைகிறது. நாம் அதற்கு முன்பிருந்தே பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறோம். நம் பொருளாதார சவால்களை நோக்கி, அரசு தொடுக்கும் எதிர்வினைகள் துவங்கிவிட்டன. இருந்தும், தொடர்ந்து நம்மால் எவ்வளவு குறுகிய காலகட்டத்தில் மீண்டும் வளர்ச்சியை திரும்பி கொண்டு வர முடியும் என்ற கேள்வி இருக்கிறது.அடிப்படையில், முதலீடு சார்ந்து மட்டுமே, நம் நாட்டின் அனைத்து பொருளாதார முன் நகர்வுகளும் இருப்பதை அனைவரும் ஏற்கின்றனர். இனி வரும் மாதங்களில், பொருளாதார குறியீடுகளை விட, முதலீட்டு குறியீடுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். அவற்றில் இருந்து மட்டுமே பொருளாதார விடைகள் பிறக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.ஒரு முதலீட்டாளரின் வாழ்வில் சில காலகட்டடங்கள், பெரும் சவாலாக அமைவது உண்டு. அந்த காலகட்டங்களில், அவர்களின் நோக்கம், கவனம், நகர்வு மற்றும் நம்பிக்கை எடுக்கும் திசை, அவர்கள் வாழ்வையே மாற்றி அமைக்கும் தன்மை கொண்டவை.
இந்த காலகட்டம் நிச்சயம் அத்தகைய விளைவுகளுக்கான அஸ்திவாரத்தை அமைக்கும்.சில தருணம்மிகக் கவனமாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை ஆராய்ந்து, நுணுக்கமான பார்வைகளை, புரிதல் அடிப்படையில் அமைத்து, முதலீட்டு முடிவுகளை எடுக்கும் நேரம் இது. இந்த காலகட்டம், 2013 போன்று மிக அரிய வாய்ப்புகளை நமக்கு தரும். அந்த வாய்ப்புகள், வரலாற்று வாய்ப்பாகப் பார்க்கப்பட வேண்டும்.பொருளாதார வரலாற்றில், வெகு சில தருணங்கள் மட்டுமே இப்படி நமக்கு அமையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|