பதிவு செய்த நாள்
19 நவ2019
03:49
சென்னை: நடப்பு 2019 - 20ம் நிதி ஆண்டின், இரண்டாம் காலாண்டில், மத்திய அரசின், ஹட்கோ நிறுவனத்தின், நிகர லாபம், 2.16 மடங்கு உயர்ந்து, 725.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, சென்னை ஹட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடப்பு நிதி ஆண்டின், இரண்டாம் காலாண்டில், ஹட்கோ நிறுவனத்தின் நிகர லாபம், 2.16 மடங்கு வளர்ச்சி அடைந்து, 725.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2018ல், 335.68 கோடி ரூபாயாக இருந்தது.நிறுவனத்தின் மொத்த வருவாய், 1.13 மடங்கு வளர்ச்சி அடைந்து, 2,053.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர மதிப்பு, 10 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 980 கோடி ரூபாயாக உள்ளது.கடன்களின் அளவு, 52 சதவீதம் அதிகரித்து, 5,311 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த வராக் கடன், 4.9 சதவீதமாகவும், நிகர வராக் கடன், 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|