ஹட்கோ லாபம் 726 கோடி ரூபாய் ஹட்கோ லாபம் 726 கோடி ரூபாய் ... வோடபோன் ஐடியா மொபைல் டிசம்பர் முதல் கட்டண உயர்வு வோடபோன் ஐடியா மொபைல் டிசம்பர் முதல் கட்டண உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரியல் எஸ்டேட்டில் தனியார் பங்கு முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
06:11

பெங்­க­ளூரு : கடந்த ஐந்து ஆண்­டு­களில், இந்­திய ரியல் எஸ்­டேட் துறை, ஒரு லட்­சம் கோடி ரூபாய்க்­கும் மேல், தனி­யார் பங்கு முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ள­தாக ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யில், 2015- – 2019ம் ஆண்­டு­களில், ஒரு லட்­சம் கோடி ரூபாய்க்­கும் மேல், வெளி­நாட்டு தனி­யார் பங்கு முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக, ரியல் எஸ்­டேட் சேவை­கள் நிறு­வ­ன­மான, அன­ராக் நிறு­வ­னத்­தின் ஆய்வு தெரி­வித்­துள்­ளது. இது குறித்து, அந்த ஆய்­வில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: ரியல் எஸ்­டேட் துறை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மொத்த வெளி­நாட்டு முத­லீட்­டில், 63 சத­வீ­தம் அதா­வது, 63 ஆயி­ரம் கோடி ரூபாய்க்­கும் மேல், வணிக ரீதி­யான ரியல் எஸ்­டேட் பிரி­வில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அழுத்தம்இதே கால­கட்­டத்­தில், குடி­யி­ருப்பு பிரி­வில், 10 ஆயி­ரத்து 800 கோடி ரூபாய் அள­வுக்கு மட்­டுமே தனி­யார் பங்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளன. சில்­லரை பிரி­வில், குடி­யி­ருப்பு பிரிவை விட அதி­க­மாக அதா­வது, 12 ஆயி­ரத்து 250 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு வந்­து உள்­ளது. பொருட்­க­ளுக்­கான கிடங்­கு­கள் பிரி­வில், 7,200 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மீதி தொகை, மேம்­பாடு உள்­ளிட்ட பிற செல­வி­னங்­க­ளுக்­காக முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.இதற்கு நேர்­மா­றாக, ரியல் எஸ்­டேட்­டில், உள்­நாட்டு தனி­யார் முத­லீ­டு­கள், 2015ம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை, 17 ஆயி­ரத்து, 280 கோடி ரூபாய்க்கு செய்­யப்­பட்­டு உள்ளன. இதில், 71 சத­வீ­தம் அள­வுக்கு, அதா­வது தோரா­ய­மாக, 12 ஆயி­ரத்து 250 கோடி ரூபாய், வீடு­கள் பிரி­வில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. வேலை­களில் தாம­தம். நிறுத்­தி­வைக்­கப்­பட்ட வேலை­கள், விற்­ப­னை­யில் சரிவு என, பல­வித அழுத்­தங்­க­ளுக்கு தற்­போது ஆளா­கி­யுள்­ளது, குடி­யி­ருப்பு பிரிவு கட்­டு­மா­னங்­கள்.

இதை­ய­டுத்து, இப்­பி­ரி­வில் அதி­க­ளவு முத­லீடு செய்­யப்­பட்­டுள்ள உள்­நாட்டு தனி­யார் பங்கு முத­லீ­டு­கள் கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளாகி உள்­ளது. அதிக லாபத்­து­டன் வெளி­யே­று­வது கடி­ன­மாகி உள்­ளது.

லாபம்இன்­னொரு பக்­கம், கடந்த ஐந்து ஆண்­டு­களில், ரியல் எஸ்­டேட் வணிக பிரி­வில், நிலை­யான தேவை, மற்­றும் அதி­க­ரித்து வரும் வாடகை ஆகி­யவை கார­ண­மாக, வெளி­நாட்டு தனி­யார் பங்கு முத­லீ­டு­கள் அதிக லாபத்தை காண்­கிறது. பிளாக்ஸ்­டோன், புரூக்­பீல்டு, ஜி.ஐ.சி., அசெண்­டாஸ் மற்­றும் எக்­ஸாண்­டர் ஆகிய ஐந்து வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், 75 சத­வீ­தத்­துக்­கும் மேலாக முத­லீடு செய்­துள்ளன. இவை முக்­கி­ய­மான, 7 நக­ரங்­களில் மட்­டு­மின்றி, இரண்­டாம் நிலை நக­ரங்­க­ளி­லும் முத­லீடு செய்ய முன்­வந்­துள்ளன.

உள்­நாட்­டைப் பொறுத்­த­வரை மோதி­லால் ஆஸ்­வால், எச்.டி.எப்.சி., வெஞ்­சர், கோட்­டக் ரியால்ட்டி, ஏ.எஸ்.கே குழு­மம், ஆதித்ய பிர்லா பி.இ., ஆகிய நிறு­வ­னங்­கள் அதி­க­ள­வில் முத­லீடு செய்­துள்ளன. இவை மொத்­தம், 54 சத­வீ­தம் அதா­வது, 9,360 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு செய்­து உள்ளன. இவ்­வாறு ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)