பதிவு செய்த நாள்
20 நவ2019
07:07

மும்பை : கேரளாவை சேர்ந்த, கத்தோலிக் சிரியன் வங்கி என அழைக்கப்பட்ட, சி.எஸ்.பி., வங்கி, 410 கோடி ரூபாய் நிதியை திரட்ட, பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும், ஒரு பங்கின் விலை, 193 ரூபாயிலிருந்து, 195 ரூபாய் வரை என, நிர்ணயித்து அறிவித்துள்ளது.
பங்கு வெளியீட்டின்போது, 10 ரூபாய் முகமதிப்பில், 24 கோடி ரூபாயும், நிறுவனர்களின், 1.97 கோடி பங்குகளை வெளியிடுவதன் மூலம், 385 கோடி ரூபாயும் திரட்ட, சி.எஸ்.பி. வங்கி திட்டமிட்டு உள்ளது.பங்கு வெளியீடு இம்மாதம், 22ம் தேதியில் துவங்கி, 26ம் தேதியன்று முடிவடைகிறது. மேலும், ஒரு பங்கின் விலை, 193 ரூபாயிலிருந்து, 195 ரூபாய் வரை என நிர்ணயித்துள்ளது. எச்.டி.எப்,.சி., லைப் ரிலையன்ஸ், நிப்பான் லைப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடன்ஷியல் ஆகியவை அவற்றிடம் இருக்கும், 6 சதவீத பங்குகளிலிருந்து வெளியேறுகின்றன.
மேலும், பெடரல் பேங்க் நிறுவனமும், அதனிடமிருக்கும், 1.68 சதவீத பங்குகளை விற்று வெளியேறுகிறது. புதிய பங்கு வெளியீட்டை அடுத்து, சி.எஸ்.பி., வங்கியின் நிறுவனரான, பேர்பாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 50.09 சதவீத பங்கு, 49.73 சதவீதமாக குறையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|