பதிவு செய்த நாள்
20 நவ2019
07:09
சென்னை : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், மானிய உதவி பெற விண்ணப்பிக்குமாறு, சென்னையில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், அழைப்பு விடுத்து உள்ளது.
இது குறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை சென்னை மண்டல இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் -குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, இந்த தொழில் துறையினருக்கு பலன் அளிக்கும், பல்வேறு மானிய உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இத்தொழில் துறையினரின் உற்பத்தி பொருட்கள், குறைகள் அற்றவையா என மதிப்பீடு செய்ய, அவற்றை வெண்கலம், வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் என, ஐந்து பிரிவுகளாக அந்த நிறுவனங்கள் வகைப்படுத்தப்படும்.
இந்த சான்றிதழ் பெற, மதிப்பீட்டுக் கட்டணத்தில், 80 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. -மேலும் இந்நிறுவனங்கள் இடைவெளியை ஆய்வு செய்யவும், விளைவுகள் இல்லாத நிலையை ஏற்படுத்தவும், தர மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை பெறவும், 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதே போல, தொழில் அரவணைப்பு, அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு பயிற்சி நிறுவனம், டிஜிட்டல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு பிரிவுகளில், மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.தகுதி வாய்ந்த, ‘உத்யோக் ஆதார்’ ஆவணத்தைப் பெற்றுள்ள, பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும், இந்த சலுகைகளை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|