பதிவு செய்த நாள்
20 நவ2019
07:11

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நேற்று, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில், 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.
நேற்று பங்குச் சந்தைகளில், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தொட்ட, முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை இந்நிறுவனம் பெற்றுள்ளது. நேற்று வர்த்தக முடிவில், இந்நிறுவனத்தின் பங்கு விலை, 3.52 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,509.80 ரூபாயாக நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, 1,514.95 ரூபாய் என்ற நிலையை தொட்டது. இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 32 ஆயிரத்து, 525 கோடி ரூபாய் அதிகரித்து, 9.57 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த மாதம் இந்நிறுவனம், 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது.அதேபோல், 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்நிறுவனம்தான், 2018ல் முதலில் தொட்டது.
இந்நிறுவனத்தின் பங்குகள், இந்த ஆண்டில் இதுவரை, 34 சதவீதம் அளவுக்கு லாபமீட்டியுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, இரண்டாவது இடத்தில், டி.சி.எஸ்., நிறுவனமும், மூன்றாவது இடத்தில், எச்.டி.எப்.சி., வங்கி நிறுவனமும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|