பதிவு செய்த நாள்
20 நவ2019
07:12

புதுடில்லி: நாட்டிலுள்ள மொழி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவுமாறு, நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. மேலும் இன்டர்நெட்டில் உள்ள விஷயங்களை மக்களுக்கு அவரவர் மொழிகளில் வழங்குவதற்கான முயற்சியிலும் அரசு இறங்கி உள்ளது என, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் அஜய் பிரகாஷ் சாவ்னி கூறியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது: வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள், ஒருவருடன் ஒருவர் உரையாடுவதில் உள்ள மொழித் தடையை நீக்கும் வகையில், தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளை ஏற்படுத்த அரசு முயற்சிகள் செய்து வருகிறது.தற்போதுள்ள இணைப்பு மொழியான ஆங்கிலத்தின் தலையீடு இல்லாத வகையில், எந்த ஒரு இந்தியரும், தன் தாய்மொழியை பயன்படுத்தி, இன்னொரு மொழியை தாய்மொழியாக கொண்ட வேறு ஒரு இந்தியருடன் உரையாட ஒரு ஏற்பாடு தேவை. இத்தகைய இலக்கை நாம் நிர்ணயிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், உரையாடல்களை அதே நொடியில் மொழிபெயர்த்து வழங்கும் தொழில்நுட்ப வசதியை, இந்திய மொழிகளிலும் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.இது ஒரு, 10 ஆண்டு காலம் பிடிக்கும் முயற்சியாகும். நாட்டில் மொழி குறித்த பிரச்னைகளுக்கு தீர்வை கொண்டுவர வேண்டும்.என்னை பொறுத்தவரை, நம்மால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் என கருதுகிறேன்.
இணையதளங்களை எடுத்துக் கொண்டால், 0.055 சதவீதம் இணையதளங்கள் ஹிந்தி மொழியிலான உள்ளடக்கத்துடன் வருகின்றன. இதையடுத்து வங்க மொழியில் வருகின்றன.அரசாங்கத்திற்காக பராமரிக்கும் ஏராளமான வலை தளங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் உள்ளன. ஒரு பகுதி ஹிந்தியில் உள்ளன. ஆனால், இந்தியாவின் பிற மொழிகளில் இது கிடைப்பதில்லை. இந்திய மொழிகளில் உள்ளடக்கங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.இந்தியாவில் உள்ள இந்த மொழி குறித்த பிரச்னைகளை தீர்க்க, உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|