ஏற்றுமதிக்கு சலுகைகள் சயோமி கோரிக்கை ஏற்றுமதிக்கு சலுகைகள் சயோமி கோரிக்கை ...  மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளாவுக்கு பார்ச்சூன் பட்டியலில் முதலிடம் மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளாவுக்கு பார்ச்சூன் பட்டியலில் முதலிடம் ...
வர்த்தக போர் வாய்ப்பை பயன்படுத்த முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2019
06:54

புதுடில்லி : டெஸ்லா உள்ளிட்ட, 324 நிறுவனங்களுக்கு, இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க சலுகைகள் வழங்குவதாக கூறி, அழைப்பு விடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் நீடித்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பல நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருகின்றன.மேலும், சீனாவில் குறைந்த ஊதியத்தில் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதும் சிரமமாகி வருகிறது.வரைவு திட்டம்இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், இந்தியாவில் தொழில் துவங்க சலுகைகள் தருவதாக கூறி, நிறுவனங்களை ஈர்க்க, இந்தியா திட்டமிட்டு வருகிறது.


மின்சாரம், தண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய தொழிற்சாலைக்கான நிலங்களை வழங்குவது குறித்து ஒரு வரைவை தயார் செய்துள்ளது, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை.அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தக போரின் காரணமாக, வியட்நாம், மலேஷியா ஆகிய நாடுகள் அதிக பலனை பெற்றுள்ளன.நில வங்கிஆனால், இந்தியாவில் நிலம் வாங்குவது, தொழிலாளர் சட்டம் என, பல வகைகளில் சிரமங்களை சந்திக்க வேண்டியதிருப்பதால், சீனாவுக்கு மாற்றாக, இந்தியாவை தொழில் முதலீட்டாளர்கள் கருதவில்லை.


இதையடுத்து, தற்போது முன்மொழியப்படும் திட்டத்தில், சிவப்பு நாடா பிரச்னைகளை குறைத்து, முதலீட்டாளர்களை ஈர்க்க தேவையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்படி, அரசே ஒரு நில வங்கியை உருவாக்கும். மேலும், அமைவிட அடிப்படையில், முதலீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படும். பொருள் குவிப்பு தடுப்பு விஷயங்கள் குறித்தும் மாற்றங்கள் செய்யப்படும்.ஹைபிரிட் வாகனங்கள், மின் வாகனங்கள், எரிபொருள் செயல்திறன் உள்ளிட்டவை சம்பந்தமான தொழிலகங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

மின்னணு மற்றும் தொலைதொடர்பு துறையை பொறுத்தவரை சிக்கலற்ற வேலைவாய்ப்பு, முதலீடுகளுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி தொடர்பான சலுகைகள், மதிப்புக் கூட்டல் ஆகியவையும் வழங்கப்படும்.இந்த திட்டம் குறித்து, பிரதமர் அலுவலகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.சலுகைகள்ஏற்கனவே மத்திய அரசு, ஆசியாவிலுள்ள மற்ற நாடுகளுக்குடன் போட்டி போடும் வகையில், கார்ப்பரேட் வரியை குறைத்து அறிவித்துள்ளது.மேலும், முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் வகையில், அன்னிய முதலீடுகளுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேலும் சலுகைகள் அதிகரிக்கப்படும் நிலையில், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் முன்னுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முயற்சிபிரபல, எலி லில்லி அண்டு கோ, தென் கொரியாவை சேர்ந்த ஹன்வா கெமிக்கல் கார்ப்பரேஷன், தைவானின் பிரிசிஸன் இண்டஸ்ட்ரி ஆகிய நிறுவனங்களை ஈர்ப்பது குறித்த முயற்சியில் உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் ... மேலும்
business news
மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, ... மேலும்
business news
புதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)