பதிவு செய்த நாள்
22 நவ2019
01:54

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பம் செய்துள்ளது.
புரானிக் பில்டர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதற்காக, 810 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது இந்நிறுவனம்.மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் வசமிருக்கும், 18.60 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க திட்டமிட்டுள்ளது.புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை தீர்க்கவும், பொதுவான நிறுவன தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான நிர்வாகப் பணிகளை, ‘எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்படும்.
இதற்கு முன், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்து, அனுமதி வாங்கியிருந்தது புரானிக் பில்டர்ஸ் நிறுவனம்.ஆனால், திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டை இந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. தற்போது மீண்டும் சந்தைக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|