பதிவு செய்த நாள்
22 நவ2019
01:56

புதுடில்லி: தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை, 2022ம் ஆண்டு வரை செலுத்தலாம் என அரசு அவகாசம் வழங்கியது,
இத்துறைக்கு மிகப்பெரிய ஆறுதலாகும் என, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொலைபேசி சேவைகள் வழங்க அனுமதி பெற்ற நிறுவனங்கள், தங்களுடைய சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில், குறிப்பிட்ட சதவீதத்தை, ஆண்டு அனுமதி கட்டணமாகவும், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமாகவும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ உள்ளிட்ட நிறுவனங்கள், பெரும் தொகையை உடனடியாக கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகின. இதனால், இரண்டாம் காலாண்டில், இந்நிறுவனங்களின் நஷ்டம், வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. வோடபோன் ஐடியா நிறுவனம், தொடர்ந்து தொழில் நடத்த முடியுமா என அஞ்சுவதாக தெரிவித்தது.இதையடுத்து, தற்போது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக, சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இது குறித்து, இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல், ராஜன் மேத்யூஸ் கூறியதாவது: ‘ஸ்பெக்ட்ரம்’ தொகையை செலுத்துவதற்கான கால நீட்டிப்பு, கட்டண அதிகரிப்பு மற்றும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் ஆகியவை குறித்த பரிசீலனை என, மூன்று அம்சங்களும் தொலை தொடர்பு நிறுவனங்களை மூச்சு விட வைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|