பதிவு செய்த நாள்
22 நவ2019
01:59

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனங்களில் ஒன்றான, ‘நெட்வொர்க் – 18 மீடியா அண்டு இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தில், பங்குகளை வாங்க, ஜப்பானிய நிறுவனமான, ‘சோனி’ விருப்பம் தெரிவித்துள்ளது.
டோக்கியோவை அடிப்படையாக கொண்ட, ‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’ நிறுவனம், தற்போது இது குறித்த பேச்சில் ஈடுபட்டுள்ளது.இது குறித்து, இந்த துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தென் கிழக்கு ஆசிய நாடுகளில், கருத்துருவாக்கத்துக்கான தேவை மிகவும்அதிகரித்து வருகிறது.இந்நிலையில், சோனி நிறுவனம் பலவிதமான விருப்பங்களை முன்வைத்துள்ளது. ‘நெட்வொர்க் – 18’ நிறுவனத்தில் பங்குகளை பெறுவது அல்லது சோனி நிறுவனத்தின் இந்திய வணிகத்தை, நெட்வொர்க் – 18 நிறுவனத்துடன் இணைப்பதுஎன பலவித விருப்பங்களை முன்வைத்துள்ளது.இதற்கான பேச்சு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக சோனி முடித்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும். ‘நெட்பிளிக்ஸ்’ உள்ளிட்ட நிறுவன போட்டிகளை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தை பொறுத்தவரை, சர்வதேச உள்ளடக்கங்கள் கிடைப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|