முதலடி எடுத்து வைத்துள்ளது அரசு: அரசின் பங்கு விற்பனை முடிவுக்கு, ‘பிக்கி’ பாராட்டு முதலடி எடுத்து வைத்துள்ளது அரசு: அரசின் பங்கு விற்பனை முடிவுக்கு, ... ...  போர்ஜிங் துறையினர் கோரிக்கை போர்ஜிங் துறையினர் கோரிக்கை ...
முகேஷ் அம்பானியுடன் இணைய ‘சோனி’ நிறுவனம் விருப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
01:59

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனங்களில் ஒன்றான, ‘நெட்வொர்க் – 18 மீடியா அண்டு இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தில், பங்குகளை வாங்க, ஜப்பானிய நிறுவனமான, ‘சோனி’ விருப்பம் தெரிவித்துள்ளது.

டோக்கியோவை அடிப்படையாக கொண்ட, ‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’ நிறுவனம், தற்போது இது குறித்த பேச்சில் ஈடுபட்டுள்ளது.இது குறித்து, இந்த துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தென் கிழக்கு ஆசிய நாடுகளில், கருத்துருவாக்கத்துக்கான தேவை மிகவும்அதிகரித்து வருகிறது.இந்நிலையில், சோனி நிறுவனம் பலவிதமான விருப்பங்களை முன்வைத்துள்ளது. ‘நெட்வொர்க் – 18’ நிறுவனத்தில் பங்குகளை பெறுவது அல்லது சோனி நிறுவனத்தின் இந்திய வணிகத்தை, நெட்வொர்க் – 18 நிறுவனத்துடன் இணைப்பதுஎன பலவித விருப்பங்களை முன்வைத்துள்ளது.இதற்கான பேச்சு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக சோனி முடித்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும். ‘நெட்பிளிக்ஸ்’ உள்ளிட்ட நிறுவன போட்டிகளை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தை பொறுத்தவரை, சர்வதேச உள்ளடக்கங்கள் கிடைப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் ... மேலும்
business news
மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, ... மேலும்
business news
புதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Tamilan - NA,United Arab Emirates
23-நவ-201900:18:38 IST Report Abuse
Tamilan நாடு முழுவதும் சுருட்டியது போதாது என்று உலகம் முழுவதும் சுருட்ட போட்ட திட்டங்களின் ஒரு பகுதி . இவர்கள் உலகமெல்லாம் போய் சேர்க்கும் சொத்துக்கள் இவர்களுக்கு . அதனால் கொண்டு வரும் பாதகங்களை அரசும் மக்களும் சமாளிக்க வேண்டும் . அப்போதுதான் நாடு உலகில் முன்னேற முடியும் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)