பதிவு செய்த நாள்
27 நவ2019
06:56

புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரபலமான ஆரம்ப நிலை காரான, ஆல்டோ, 38 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகி, சாதனை படைத்துள்ளது.
கடந்த, 2000த்தில் அறிமுகமான இந்த கார், 10 லட்சம் என்ற விற்பனை அளவை, 2008ம் ஆண்டில் எட்டியது. 2012ல், 20 லட்சம் கார்கள் விற்பனை என்ற உயரத்தை எட்டியது. அடுத்து, 2016ல், ஆல்டோ விற்பனை, 30 லட்சத்தை தாண்டியது. தற்போது இதன் விற்பனை, 38 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் காராக, ஆல்டோ உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷாஷாங் ஸ்ரீவத்ஸ்சவா கூறியுள்ளதாவது: கச்சிதமான வடிவம், எரிபொருள் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மலிவு விலை போன்ற பல காரணங்களால், நுழைவு நிலையிலான காரை வாங்குபவர்களுக்கு, ஆல்டோ சிறந்த தேர்வாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு, மாருதி நிறுவனம், ’பாரத் ஸ்டேஜ் 6’ விதிமுறைகளுக்கு ஏற்ற பதிப்பை வெளியிட்டது. வேக எச்சரிக்கை, பார்க்கிங் சென்ஸார், சீட் பெல்ட், ஏ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகம் ஆனது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|