ஆல்டோ விற்பனை 38 லட்சத்தை தாண்டியது ஆல்டோ விற்பனை 38 லட்சத்தை தாண்டியது ...   பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு ...
10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் ரிலையன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
07:03

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மிக அருகில் வந்துள்ளது.

கச்சா எண்ணெய், தொலைதொடர்பு ஆகிய துறைகளில் கோலோச்சி வரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இதன் சந்தை மதிப்பு, நேற்று வர்த்தகத்தின் இடையே, 9 லட்சத்து, 99 ஆயிரத்து, 45 கோடி ரூபாய் என்ற நிலையை தொட்டு பின் இறங்கியது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மதிப்பு, 9.88 லட்சம் கோடி ரூபாயாக நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தையும், வரலாற்றில் முதல் முறையாக, 41 ஆயிரத்து, 120 புள்ளிகளை வர்த்தகத்தின் இடையே எட்டிப்பிடித்தது.

சந்தை தொடர்ந்து ஏற்றம் பெறும் நிலையில், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை முதலில் பெறும் இந்திய நிறுவனம் என்ற பெயரை, ரிலையன்ஸ் பெற்றுவிடும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.இந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு, 38.46 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த வாரம் தான், 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)