பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு ...  ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
07:12

புதுடில்லி : நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 4.7 சதவீதமாக குறைந்திருக்கும் என, ‘பிட்ச்’ குழுமத்தை சேர்ந்த, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தை, நான்காவது முறையாக குறைத்து, கணித்து அறிவித்துஉள்ளது, இந்நிறுவனம்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 5 சதவீதமாக குறைந்தது. இது, 2013ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.இந்நிலையில், தற்போது, இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி, 4.7 சதவீதமாக மேலும் குறையும் என, இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்து உள்ளது. இவ்வாறு வளர்ச்சி குறைவாக இருந்தால், தொடர்ந்து, ஆறாவது காலாண்டாக வளர்ச்சி குறைவை நாடு சந்தித்ததாகிவிடும்.

இது குறித்து, இந்தியா ரேட்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதம், 5.6 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நான்காவது முறையாக வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டிருந்தது.இதேபோல், இரண்டாவது காலாண்டிலும் வளர்ச்சி, 4.7 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல்களால், சில்லரை விற்பனை, கார் தயாரிப்பு, வீடு விற்பனை, கனரக தொழிற்சாலைகள் ஆகியவற்றிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், கிராமங்களில் விவசாயிகளின் வருமானம் குறைவாக இருப்பது, நகர்ப்புறங்களில் வருமானம் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை சேர்ந்து, நுகர்வு தேவையை கணிசமாக பாதித்துள்ளது.

பண்டிகை கால தேவை கூட நுகர்வை அதிகரிக்க உதவவில்லை.இது உணவு பொருட்கள் அல்லாதவற்றுக்கான கடன், வாகன விற்பனை, நுகர்வோர் சாதனங்கள் விற்பனை ஆகியவற்றில் பிரதிபலித்துள்ளது.இவ்வாறு இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்து உள்ளது.இதற்கு முன்பாக, மூடிஸ் இன்வெஸ்ட்டார்ஸ் சர்வீசஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டுக்கான மதிப்பீட்டை குறைத்து, 5.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. இப்போது, இந்தியா ரேட்டிங்ஸ் அதை விட குறைத்து, 5.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது. இரண்டாவது காலாண்டுக்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த விபரம், வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)