பதிவு செய்த நாள்
28 நவ2019
02:10
மும்பை : மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி இரண்டும் நேற்று வர்த்தக முடிவில், இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வை கண்டுள்ளன.
சென்செக்ஸ், 199.31 புள்ளிகள் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவான, 41020.61 புள்ளிகளில் நிலை பெற்றது. சென்செக்ஸில் உள்ள, 30 நிறுவனங்களில், 24 நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளன.இதே போல் நிப்டியும், வர்த்தக முடிவில், 63 புள்ளிகள் அதிகரித்து, 12100.70 என்ற உச்சத்தை தொட்டு நிலைபெற்றுள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கி, தகவல் தொழில்நுட்பம், வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளை அதிக அளவில் வாங்கியதை அடுத்து, சந்தை இந்த சாதனையை புரிந்துள்ளது.
சென்செக்ஸில், அதிகபட்ச லாபத்தை, யெஸ் பேங்க் அடைந்துள்ளது. 7.65 சதவீதம் அளவுக்கு, இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது. இதையடுத்து, எஸ்.பி.ஐ., பங்குகள், 2.43 சதவீதம் அதிகரித்துள்ளது.இருப்பினும், எல்., அண்டு டி., நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது. மேலும், ஐ.டி.சி., டாடா ஸ்டீல் பங்குகளும் விலை சரிவைக் கண்டன.தொடரும் வெளிநாட்டு முதலீடுகள், உலக சந்தைகளின் சாதகமான போக்கு ஆகியவற்றின் காரணமாக, இந்திய சந்தைகள் உயர்வை காண்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|