அதிக சந்தை முதலீடு ஆர்.ஐ.எல்., சாதனை அதிக சந்தை முதலீடு ஆர்.ஐ.எல்., சாதனை ...  டி.எச்.எப்.எல்., மீது நடவடிக்கை: விண்ணப்பித்தது ரிசர்வ் வங்கி டி.எச்.எப்.எல்., மீது நடவடிக்கை: விண்ணப்பித்தது ரிசர்வ் வங்கி ...
உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 9வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2019
01:55

புதுடில்லி : உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க வணிக இதழான, போர்ப்ஸ், ‘தி ரியல்டைம் பில்லியனர்ஸ் லிஸ்ட்’ எனும், உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.தினசரி வர்த்தக அடிப்படையில், சொத்து மதிப்பில் ஏற்படும் அன்றாட ஏற்ற இறக்கங்களின் படி, இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலில், 60 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 4.2 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி.

இந்த போர்ப்ஸ் பட்டியலில், முதலிடத்தை, ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ் பிடித்து உள்ளார். நடப்பு, 2019ம் ஆண்டுக்கான, போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி, 13 இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், கடந்த வியாழனன்று, 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியதை அடுத்து, அம்பானி யின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.

இதனால், அவர் வியாழனன்று, ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறினார்.முதலிடத்தைப் பிடித்த அமேசான் நிறுவனரான, ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 8.14 லட்சம் கோடி ரூபாய். இவரை அடுத்து, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், 7.72 லட்சம் கோடி ரூபாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)