பதிவு செய்த நாள்
01 டிச2019
02:35
புதுடில்லி: ‘ஹுண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம், அதன் சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றான, வென்யு எனும், எஸ்.யூ.வி., மாடல் காரை, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வென்யு மாடல் காரை, வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஓட்டுனர் இருக்கை இடப்புறமாக இருக்கும் வகையில் வாகனத்தை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையிலிருந்து, 1,400 கார்கள், டிசம்பர் மாதத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதியாக உள்ளன.ஏற்கனவே, நேபாளம், பூட்டான், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.வென்யு மாடல் காருக்கான பதிவு, நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் மேலும் பல புதிய தயாரிப்புகளை, வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அறிமுகம் செய்யும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வென்யு கார், கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|