பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ ... நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி., நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி., ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
23:46

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, முந்­தைய மூன்று வாரங்­களில், அதிக ஏற்­றத்­தாழ்­வு­கள் எது­வும் இல்­லா­மல் வர்த்­த­க­மாகி வந்­தது.

இந்­நி­லை­யில், கடந்த வாரம் வியா­பா­ரம் ஆரம்­பித்தநாள் ­மு­தல், சந்தை உயர்ந்து வந்­தது. வியா­ழ­னன்று, புதிய வர­லாற்று உச்­சத்தை அதா­வது, 12,150 புள்­ளி­க­ளைத் தாண்டி வர்த்­த­கம் ஆனது.இருப்­பி­னும், வார இறுதி நாளான வெள்­ளி­யன்று, நாட்­டின் 2­வது காலாண்­டுக்­கான, ஜி.டி.பி., வளர்ச்சி விகித அறி­விப்பு வெளி­வர இருந்த நிலை­யில், வளர்ச்சி விகி­தம் குறைந்து காணப்­படும் என்ற எதிர்­பார்ப்­பில், சந்தை சரிந்து வர்த்­த­கம் நடை­பெற்­றது. எதிர்­பார்த்­தது போலவே, ஜி.டி.பி., குறித்த முடி­வும் அமைந்­தது.

மத்­திய புள்­ளி­யி­யல் துறை அறி­விப்­பின்­படி, நாட்­டின்இரண்­டாம் காலாண்டு, ஜி.டி.பி., வளர்ச்சி விகி­தம் சரிந்து, 4.5 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. இதற்கு முந்­தைய காலாண்­டில் இது, 5 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.மஹா­ராஷ்­டி­ரா­வில் தேர்­தல் முடி­வு­கள்வெளி­யாகி ஒரு மாதம் ஆகி­விட்ட நிலை­யி­லும், அங்கு ஆட்சி அமைப்­ப­தில் சிக்­கல்­கள் இருந்து வந்­தன.
இந்­நி­லை­யில், புதிய கூட்­டணி அமைக்­கப்­பட்டு, ஆட்சி அமைக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­க­வும் சந்தை உயர்ந்து, வர்த்­த­கம் நடை­பெற்­றது.


கடந்த, 28ம் தேதி, ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் சந்தை மதிப்பு, 10 லட்­சம் கோடி ரூபாய் என்ற வர­லாற்று உச்­சத்தை அடைந்­தது. இதை­ய­டுத்து, தற்­போது உலக அள­வில் மிகப்­பெ­ரிய
எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­ன­மாக உயர்ந்­துள்­ளது.மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், தொடர்ந்து ஐந்து வாரங்­க­ளாக உயர்ந்து, புதிய வர­லாற்று உயர்­வான, 41163
புள்­ளி­களை கடந்த வாரம்எட்­டி­யது. தேசிய பங்­குச் சந்­தை­யில் உள்ள துறை சார்ந்த குறி­யீட்டு எண்­கள் அனைத்­தும், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­கம் ஆகின.


இதில் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் பொதுத்­துறை வங்­கி­கள் குறி­யீட்டு எண், 4 சத­வீ­தம்
அள­வுக்கு உயர்ந்­தது. ஊட­கத் துறை குறி­யீட்டு எண், 7 சத­வீ­தம் சரிந்து வர்த்­த­கம்
நடை­பெற்­றது.சர்­வ­தேச சந்­தை­யில், அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­த­தன் கார­ண­மாக, ரூபா­யின் மதிப்பு, கடந்த வாரம் மீண்­டும் சரிந்­தது. தற்­போது, 1 அமெ­ரிக்க டாலர், 71.73
ரூபா­யாக உள்­ளது.

இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, மேலும் சில முக்­கிய பொரு­ளா­தார கார­ணி­கள் வெளி­வர உள்­ளன. அதன் அடிப்­ப­டை­யில் சந்­தை­யின் போக்கு அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதில் முத­லா­வ­தாக, கடந்த மாதம் விற்­ப­னை­யான வாக­னங்­கள் குறித்த புள்­ளி­ வி­ப­ரம் வெளி­வ­ரு­கிறது.

நாட்­டில் வாக­னங்­கள் விற்­பனை, கடந்த ஜன­வரி முதல் சரிந்து வந்த நிலை­யில், அக்­டோ­பர் மாதத்­தில் சிறிய அளவு மாற்­றம் ஏற்­பட்­டி­ருந்­தது.அடுத்து, நவம்­பர் மாத தொழில்­ துறை வளர்ச்சி விகி­தம் குறித்த விப­ரம் வெளி­வர உள்­ளது. வரும் வியா­ழன் அன்று, இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் வட்டி விகித கொள்கை கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில் ரெப்போ வட்டி விகி­தம், 0.25 சத­வீ­தம் அள­வுக்கு குறைக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு நிலவி வரு­கிறது.

இந்த ஆண்­டில் இது­வரை, 5 முறை வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வாரம் நிப்­டி­யைப் பொறுத்­த­வரை, அதன் சப்­போர்ட், 11972 மற்­றும் 11850 புள்­ளி­கள் ஆகும். ரெசிஸ்­டென்ஸ், 12135 மற்­றும் 12190 புள்­ளி­கள் ஆகும்.


முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை:நாட்டிலுள்ள முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான, தேசிய பங்குச் சந்தை, அடுத்த ஆண்டில் புதிய பங்கு ... மேலும்
business news
மும்பை:‘பிரின்ஸ் பைப்ஸ் அண்டு பிட்டிங்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்குகள் வெளியீடு, இம்மாதம், 18ம் தேதி துவங்கி, 20ம் ... மேலும்
business news
கோவை:‘‘எல்.ஐ.சி., நிறுவனம் இந்தாண்டில் மட்டும் பங்குச் சந்தை முதலீடுகளின் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ... மேலும்
business news
வாடிக்­கை­யா­ளர்­கள் பங்­கு­களை முறை­கே­டாக பயன்­ப­டுத்தி­ய­தாக, பங்கு வர்த்­தக தரகு நிறு­வ­னம் கார்வி ... மேலும்
business news
பங்குச் சந்தை டிசம்பர் 01,2019
தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, கடந்த வாரம், ஆரம்­பம் முதலே சரிந்து வர்த்­த­கம் ஆனது.ஆனால், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)