தமிழக அடையாளங்கள் பொருந்திய 'டைட்டன்' கை கடிகாரம் தமிழக அடையாளங்கள் பொருந்திய 'டைட்டன்' கை கடிகாரம் ...  ‘பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்’ ‘சானிடைசர்’ அறிமுகம் ‘பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்’ ‘சானிடைசர்’ அறிமுகம் ...
காப்பீடு திட்டங்களில் அமலுக்கு வந்திருக்கும் மாற்றங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
23:55

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, யூலிப் உள்ளிட்ட காப்பீடு பாலிசிகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பல்வேறு காப்பீடு திட்டங்களுக்கான நெறிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன.


இதையடுத்து, காப்பீடு நிறுவனங்கள், புதிய நெறிமுறைகளுக்கு பொருந்தும் வகையில்,
தங்கள் பாலிசிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. புதிய நெறிமுறைகளுக்கு
பொருந்தாதபழைய பாலிசிகள் கடந்த நவம்பர்மாதத்துடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.
பாலிசிதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய
நெறிமுறைகளை அடுத்து, பல்வேறு பாலிசிகளில் ஏற்பட்டுள்ளமாற்றங்களை பார்க்கலாம்.

பென்ஷன் திட்டங்கள்

புதிய நெறிமுறைகளை அடுத்து, பென்ஷன் திட்டங்களில் முக்கிய மாற்றங்களை நுகர்வோர் உணரலாம். முதிர்வு காலத்தில் பணத்தை விலைக்கு கொள்வதில் சாதகமான அம்சம், முன்கூட்டியே விலக்கி கொள்ளும் அம்சம் என பென்ஷன்பாலிசிகள் நுகர்வோருக்கு மேலும் நட்பாக அமையும் நிலைஏற்பட்டுள்ளது.புதிய பென்ஷன் திட்டங்களில், முதிர்வு காலத்தில் விலக்கி கொள்ள அனுமதிக்கப்படும் தொகை, 60சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் 33, சதவீத தொகையை மட்டுமே விலக்கி கொள்ள முடியும்.


எனினும், 33 சதவீதத்திற்கு மேலான தொகை வரி விதிப்பிற்கு பொருந்தும். பென்ஷன்
திட்டங்களில், ஐந்தாண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுதி விலக்கல் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.


புதிய நெறிமுறைகளின் படி, காப்பீடு நிறுவனங்கள் யூலிப் எனப்படும் யூனிட்களுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டங்களுக்கு முதிர்வு தொகையில் உத்தரவாதம் அளிக்கும்.
இதன் காரணமாக, பாலீசியை நிர்வகிக்கும் நிறுவனங்கள், டெப்ட் பண்ட் போன்ற இடர் குறைந்த நிதி சாதனங்களில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால், பாலிசி அளிக்க கூடிய பலன் குறையலாம். ஆனால், உத்தரவாதம் தேவையா, இல்லையா என்பதை
பாலிசிதாரர் தீர்மானித்துக்கொள்ளலாம்.இளம் வயதில், ஓய்வு கால திட்டமிடலை
துவக்குபவர்கள், அதிக சம பங்கு வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

நுகர்வோர் நலன்

புதிய பாலிசிகள் நுகர்வோருக்கு நட்பு மிக்கவையாக அமையும் என கருதப்படுகிறது.
எண்டோமென்ட் பாலிசிகளை பொருத்தவரை, இரண்டு ஆண்டுகள் பிரிமியம் செலுத்திஇருந்தால் சரண்டர் மதிப்பை பெறும்.இதற்கு முன், இந்த வரம்பு மூன்று ஆண்டுகளாக
இருந்தது. முன்கூட்டியே பாலிசியில் இருந்து வெளியேறும் போது அளிக்கப்படும் தொகை சரண்டர் மதிப்பு என குறிப்பிடப்படுகிறது.


இந்த தொகை, 30 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் கால அளவு கொண்ட பாலிசிகளை பொருத்தவரை, பிரிமியம்
செலுத்தப்பட்ட காலத்திற்கு ஏற்ப இந்த மதிப்பு அதிகரிக்க வேண்டும்.பாலிசிகளை தொடர முடியவில்லை என்றால், ஐந்தாண்டுகளுக்கு பிறகு பிரிமியம் தொகையை குறைத்து,
பாலிசியை தொடரலாம்.


அதே போல பிரிமியம் செலுத்தாமல் விடப்பட்ட பாலிசிகளை, புதுப்பித்து தொடர்வதற்கான காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)