சேவைகள் துறை வளர்ச்சி 3 மாதங்களுக்கு பின் உயர்வுசேவைகள் துறை வளர்ச்சி 3 மாதங்களுக்கு பின் உயர்வு ...  வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை ...
‘சூப்பர் மேன்’ ஆனார் சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியானார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
23:56

புது­டில்லி:கூகு­ளின் தாய்நிறு­வ­ன­மான, ‘ஆல்­ப­பெட்’ நிறு­வ­னத்­தின் தலைமை செயல்
அதி­கா­ரி­யாக, சுந்­தர் பிச்சை நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இதை­யடுத்து, உல­கின் சக்தி வாய்ந்த கார்ப்­ப­ரேட் தலை­வர்­களில் ஒரு­வ­ராக உயர்ந்­தி­ருக்­கிறார், சுந்­தர் பிச்சை.

இனி, ‘கூகுள், ஆல்­ப­பெட்’ ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும், தலைமை செயல் அதி­கா­ரி­யாக சுந்­தர் பிச்­சையே இருப்­பார்.ஆல்­ப­பெட்­டின் தலைமை செயல் அதிகாரி மற்­றும் தலை­வர் பொறுப்­பு­களை வகித்து வந்த, அதன் இணை நிறு­வ­னர்­களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின், தங்­கள் பத­வி­யி­ லிருந்து வில­கு­வ­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

சிறந்த நபர்

இவர்­கள் இரு­வ­ரும் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னா­லும், நிறு­வ­னத்­தின் உறுப்­பி­னர்­க­ளாக
தொட­ரு­வர் எனக் கூறப்­பட்­டுள்­ளது.கூகுள் நிறு­வ­னத்தை மறு­சீ­ர­மைக்­கும் முயற்­சி­களில் ஒன்­றாக, 2015ம் ஆண்டு, ஆல்­ப­பெட் துவங்­கப்­பட்­டது.இதை­யடுத்து, இந்­நிறு­வ­னம் கூகு­ளின் தாய் நிறுவன­மா­னது. ஆல்­ப­ பெட்­டின் தலைமை செயல் அதி­கா­ரி­யாக லாரி பேஜும்,
தலை­வ­ராக செர்கே பிரி­னும் பொறுப்பு ஏற்­ற­னர்.

இதன் தொடர்ச்­சி­யாக, கூகு­ளின் தலைமை செயல் அதி­கா­ரி­யாக சுந்­தர் பிச்சை நிய­மிக்­கப்­பட்­டார்.தற்­போது, ஆல்­ப­பெட் பொறுப்­பு­க­ளி­லிருந்து பேஜ் மற்றும் பிரின் விலகி உள்­ள­னர்.
புதிய முயற்­சி­களை துவங்­கு­வ­தற்­காக, இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கும் இந்த இரு­வ­ரும், நிர்வா­கக் குழு உறுப்பி­னர்­க­ளா­க­வும், பங்கு­தா­ரர்­களாக­வும், இணை
நிறு­வனர்­க­ளா­க­வும் தொடர்ந்து செயல்­ப­டப் போவ­தா­கத் தெரி­வித்­து உள்ள­னர்.

புதிய பொறுப்பை ஏற்க இருக்­கும் சுந்­தர் பிச்சை குறித்து, இவர்­கள் இருவரும் குறிப்­பிட்­டு உள்ள­தா­வது:ஆல்­ப­பெட் நிறு­வ­னத்தை இன்­னும் திறம்­ப­டச் செயல்­பட வைக்க நிறைய
வழி­கள் இருக்கும்­போது, பொறுப்பு­களை நாங்­களே வைத்­தி­ருக்க எப்­போ­தும் நினைத்­தது­இல்லை.சுந்­தர் பிச்சை அனைத்து தரப்­பி­ன­ரி­ட­மும், தொழில் நுட்­பம் தொடர்­பான ஆர்­வத்தை துாண்டும் வகை­யில் செயல்­பட்டு வருகிறார்.


பெருமை மிகுந்த பெற்­றோர் போல அன்­பை­யும், அறி­வு­ரை­யை­யும் கொடுத்­து­விட்டு,
துாரத்­தி­லி­ருந்து விஷ­யங்­களை கவ­னித்­துக் கொள்­வோம்.நிறு­வ­னத்தை வழி­ந­டத்தி செல்ல, சுந்­தர் பிச்­சை­யைக் காட்­டி­லும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடி­யாது.ஆல்­ப­பெட்
மற்­றும் கூகுள் நிறு­வ­னத்­திற்கு இனி இரண்டு நிர்­வாக இயக்­கு­னர்­களும், ஒரு தலை­வ­ரும் தேவை­யில்லை.இவ்­வாறு அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

மகிழ்ச்சி

இது குறித்து, சுந்­தர் பிச்சை தெரி­வித்­துள்­ள­தா­வது:நான் தொடர்ந்து கூகுள் மீது அதிக கவ­னம் செலுத்து­வேன். கூகுளை ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பய­னுள்­ள­தாக்க முயற்­சிப்­போம். மேலும், தொழில் நுட்பத்­தின் மூலம் பெரிய சவால்­களை சமா­ளிப்­ப­தில், ஆல்­ப­பெட் நிறு­வ­னத்­தின் நீண்ட கால கவனம் குறித்­தும் மகிழ்ச்சி அடை­கி­றேன். பேஜ் மற்றும் பிரின் ஆகிய
இரு­வ­ருக்­கும் நன்றி.இவ்­வாறு சுந்­தர் பிச்சை மின் அஞ்­ச­லில் தெரி­வித்­து உள்­ளார்.

வளர்ச்சியின் வரலாறு

* மது­ரை­யில் பிறந்து, 47வது வய­தில் இந்த உலக உய­ரத்தை தொட்­டுள்­ளார்
* ஐ.ஐ.டி., காரக்­பூர், ஸ்டான்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கம், வார்ட்­டன் வணிக கல்­லுாரி
ஆகி­ய­வற்றில் படித்­த­வர்

* கூகு­ளில் சேர்­வ­தற்கு முன், ‘மெக்­கின்ஸி’ நிறு­வ­னத்­தில் ஆலோ­ச­கர் பணி

* 2004ல் கூகுள் நிறு­வ­னத்­தில் சேர்ந்­தார்

* 2015ல் கூகு­ளின் தலைமை செயல் அதி­காரி பணி

* ‘கூகுள் குரோம்’ உரு­வாக்­கத்­தில் பெரும்பங்­க­ளிப்பு

* ‘செஸ்’ விளை­யா­டு­வது பிடித்­த­மான ஒன்று

* ஆல்­ப­பெட் நிறு­வன பங்­கு­கள் விலை அதி­க­ரித்து, சுந்­தர் பிச்­சை­யின் நிய­ம­னத்­துக்கு, பங்குச் சந்­தை­கள் பச்­சைக் கொடி காட்­டி­யுள்­ளன.

அதிகலாபத்­தில் ‘ஆல்­ப­பெட்’

அண்­மைக் காலத்­தில் உல­கில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறு­வன­மாக, ‘ஆல்ப­பெட்’ உரு­வாகி உள்ளது. 2018ல் இதன் வரு­வாய், 7.92 லட்­சம் கோடி ரூபாய். லாபம் மட்­டும், 2.16 லட்­சம் கோடி ரூபாய்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்
business news
புதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்
business news
பெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்
business news
புதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்
business news
டாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Xavier - Muscat,Oman
05-டிச-201910:54:31 IST Report Abuse
Xavier சுந்தர் பிட்சை அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் கடின உழைப்பு நம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது சகோதரரே.கடவுள் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிக்கட்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Mohan Kumar - chennai,India
05-டிச-201909:14:38 IST Report Abuse
Mohan Kumar Avar paarppanar ru oru gumbal sonnalum sollum
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Pannadai Pandian - wuxi,China
05-டிச-201905:33:25 IST Report Abuse
Pannadai Pandian fantastic achievement....best wishes....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)