‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும்  மத்திய அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும் மத்திய ... ...  விடை சொல்லுமா பட்ஜெட் விடை சொல்லுமா பட்ஜெட் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:13

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, கடந்த வாரம், ஆரம்­பம் முதலே சரிந்து வர்த்­த­கம் ஆனது.ஆனால், தொடர்ந்து மூன்று மாத கால­மாக, அதா­வது செப்­டம்­பர் மாதம் முதல் நவம்­பர் மாதம் வரை, சுமார், 1,500 புள்­ளி­கள் உயர்ந்து இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வாரத்­தில், இரண்­டாம் காலாண்­டுக்­கான, ஜி.டி.பி., வளர்ச்சி விகி­தம் குறித்த புள்­ளி­வி­ப­ரங்­கள் வெளி­யா­கின. இது எதிர்­பார்த்­ததை விட குறை­வாக இருந்­தது. மத்­திய புள்­ளி­யி­யல் துறை அறிக்­கை­யின்­படி,நாட்­டின் இரண்­டாம் காலாண்டு ஜி.டி.பி.,வளர்ச்சி விகி­தம், 4.5 சரிந்து இருந்­தது. இது, இதற்கு முந்­தைய காலாண்­டில், 5 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
மேலும், தொழில் துறை மற்­றும் சேவைத் துறை­க­ளி­லும் தற்­போது பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.


வாகன விற்­பனை துறை­யி­லும் தொடர்ந்து சரிவு நிகழ்ந்து வரு­கிறது.இந்த ஆண்­டில்
இது­வரை, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் சுமார், 13.2 பில்­லி­யன் டாலர் அள­வுக்கு
கொள்­மு­தல் செய்து உள்­ள­னர். இது, 2014ம் ஆண்­டுக்கு பின் ஏற்­பட்ட அதி­கப்­ப­டி­யான
முத­லீ­டா­கும். சர்­வ­தேச சந்­தை­யில், உல­கில் உள்ள முன்­னணி குறி­யீட்டு எண்­கள் பல­வும் வர­லாற்று உச்­சத்தை அடைந்து வரு­கின்றன. இதன் தாக்­கம் இந்­திய சந்­தை­க­ளி­லும்
பிர­தி­ப­லித்­தது.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்­டில், இது­வரை, 5 முறை வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளது. ரெப்போ வட்டி விகி­தம் தற்­போது, 5.15 சத­வீ­த­மாக உள்­ளது.கடந்த வாரம் நடை­பெற்ற நிதிக்­கொள்கை
கூட்­டத்­தில், வட்டி விகி­தம் எந்­த­வித மாற்­ற­மும் இல்­லா­மல் அறி­விக்­கப்­பட்­டது.வாக­னத் துறை விற்­பனை சரிவு கார­ண­மாக, நிப்டி ஆட்டோ குறி­யீட்டு எண், தற்­போது சரி­வில் உள்­ளது. ஜன­வரி முதல் ஜூன் வரை­யி­லான கால கட்­டத்­தில், நாட்­டில் வாகன விற்­பனை கடு­மை­யான சரி­வைச் சந்­தித்­தது.

கன­ரக மற்­றும் பய­ணி­கள் வாகன விற்­பனை, இரு­சக்­கர வாகன விற்­பனை என அனைத்து
பிரி­வு­க­ளி­லும் சரிவு காணப்­பட்­டது. இதற்கு நுகர்­வோ­ரின் வாங்­கும் திறன் குறைவு, மற்­றும் பண­வீக்க விகி­தம் அதி­க­ரித்­தது ஆகி­யவை கார­ண­மாக அமைந்­தது. நடப்பு நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில் மொத்த வாகன விற்­பனை, முந்­தைய ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது,
10.5 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

தொலை­தொ­டர்பு துறை­யில் தொடர் இழப்பு ஏற்­பட்டு வரும் சூழ­லில், வோட­போன் ஐடியா நிறு­வ­னத்­தில் இனி­யும் முத­லீடு செய்ய இய­லாது என, பிர்லா குழு­மம் அறி­விப்பு செய்­துஉள்­ளது. இதற்கு முந்­தைய வாரங்­களில் மத்­திய அரசு தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மான ஒரு கொள்­கையை அறி­விக்­கும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது.

அத்­து­டன், சில நிறு­வ­னங்­கள் தங்­க­ளது சேவை­களுக்­கான கட்­ட­ணத்தை அதி­கப்­ப­டுத்தி
இருந்­த­தும்குறிப்­பி­டத்­தக்­கது. வரும் நாட்­க­ளி­லும், சந்­தை­யில் சரிவு தொட­ரும் என்று
எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிப்டி சப்­போர்ட், 11865 மற்­றும் 11570 ஆகும்.


ரெசிஸ்­டென்ஸ், 12070 மற்­றும் 12150 ஆகும்.

முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)