‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும்  மத்திய அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும் மத்திய ... ...  விடை சொல்லுமா பட்ஜெட் விடை சொல்லுமா பட்ஜெட் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன், டிபா­சிட் மீதான வட்டி விகி­தம் எப்­படி இருக்­கும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:22

கடன், டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கும் சூழலில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு பார்வை.

பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­ட­தற்கு மாறாக, ரிசர்வ் வங்கி தன் அண்மை கொள்கை அறி­விப்­பில் ரெப்போ விகி­தத்தை குறைக்­க­வில்லை. தொடர்ந்து ரெப்போ விகி­தத்தை குறைத்த நிலைக்கு மாறாக, தற்­போ­தைய வட்டி விகி­தமே தொட­ரும் என ரிசர்வ் வங்கி அறி­வித்­துள்­ளது.


ரிசர்வ் வங்­கி­யின் முடி­வுக்­கான கார­ணம் மற்­றும் பொரு­ளா­தா­ரத்­தின் மீதான இதன் தாக்­கம் அலசி ஆரா­யப்­பட்டு வரும் நிலை­யில், கடன்­கள் மற்­றும் டெபா­சிட்­கள் மீதான தாக்­கம் எப்­படி இருக்­கும் என்­பதே சரா­சரி முத­லீட்­டா­ளர்­கள் மன­தில் எழும் கேள்­வி­யாக இருக்­கிறது.

கடன் விகி­தத்­தில் மாற்­றம்

ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை மேலும் குறைக்­க­வில்லைஎன்­றா­லும், கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தம் ஓர­ளவுகுறைய வாய்ப்­பி­ருப்­ப­தா­கவே பர­வ­லாக கரு­தப்­ப­டு­கிறது.கடந்த
பிப்­ர­வரி மாதம் முதல் அக்­டோ­பர் மாதம் வரை, ரிசர்வ் வங்கிஅறி­வித்­துள்ள, 135 அடிப்­படை புள்­ளி­கள் வட்டி விகித குறைப்­பின் பலன், இன்­ன­மும்முழு­வ­து­மாக வாடிக்­கை­யா­ளர்­களுக்கு மாற்­றப்­ப­ட­வில்லை.

இதன் கார­ண­மாக வரும்மாதங்­களில், வட்டி குறைப்பு நிக­ழ­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அடுத்த இரண்டு காலாண்­டு­களில், 40 அடிப்­படை புள்­ளி­கள் வரை கட­னுக்­கான வட்டி விகி­தம் குறை­ய­லாம்.கடந்த, 2016 முதல் வங்­கி­கள் எம்.சி.எல்.ஆர்., முறை­யில் கடன் வழங்கி
வரு­கின்­றன. அதற்கு முன்,‘பேஸ்­ரேட்’ முறை பின்­பற்­றப்­பட்­டது.


தற்­போது, ரெப்போ விகி­தம் உள்­ளிட்ட வெளிப்­புற விகி­தத்­து­டன் இணைக்­கப்­பட்ட விகி­தத்­தில் கடன் வழங்­கப்­பட்டு வரு­கிறது. இதன் கார­ண­மாக, பேஸ்­ரேட் விகி­தத்­தில் கடன் பெற்­ற­வர்­கள்
விகி­தம் குறைந்து வரு­கிறது. வீட்­டுக்­க­டன்­களில், 15 சத­வீ­தம் பேஸ்­ரேட் அடிப்­ப­டை­யில் அமைந்­துள்­ளது. இதன் தாக்­கம் வட்டி விகி­தம் கடத்­தப்­ப­டு­வ­தி­லும் இருக்­கும் என,
எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


மேலும், பேஸ்­ரேட் விகி­தம் மற்ற கடன் விகி­தங்­களை விட அதி­க­மாக இருப்­ப­தால், இந்த விகி­தத்­தில் தொடர்­ப­வர்­கள், தங்­கள் கடனை புதிய வட்டி விகித முறைக்குமாற்­றிக்­கொள்­வது பற்றி பரி­சீ­லிக்க வேண்­டும். இதில் சாத­கம் இருக்­கும் என்­றால் மாறு­வது நல்­லது.
அதே நேரத்­தில், எம்.சி.எல்.ஆர்., விகி­தத்­தில் வட்டி விகி­தம் சரா­ச­ரி­யாக, 49 அடிப்­படை
புள்­ளி­கள் குறைந்­துள்­ளது.

டெபா­சிட் மீது தாக்­கம்

இந்த முறை­யில் வட்டி விகி­தம்,ஆறுமாதங்­க­ளுக்கு ஒரு­முறை அல்­லதுஆண்­டுக்கு ஒரு முறை, ‘ரிசெட்’ செய்­யப்­ப­டு­கிறது. 2016ம் ஆண்­டுக்குபிறகு இந்த கடன் விகி­தம் சீரான அளவில் குறைந்து வரு­கிறது. தொடர்ந்து ரிசெட் செய்­யப்­படும் போது, இந்த போக்கு தொட­ர­லாம்.
எனி­னும் வாடிக்­கை­யா­ளர்­கள் ரெப்போ விகி­தத்­து­டன் இணைக்­கப்­பட்ட கட­னுக்கு மாறு­வது பலன் தருமா என்­றும் பரி­சீ­லிக்­க­லாம்.கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தம் குறைய வாய்ப்­பி­ருப்­பது போலவே, இதன் விளை­வாக டெபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­த­மும் குறை­ய­லாம் என
கரு­தப்­ப­டு­கிறது.


இரண்டு விகி­தங்­க­ளுமே ஒன்­றுக்கு ஒன்று தொடர்­பு­டை­யவை. எனவே, டெபா­சிட்­கள் தரும்
வட்டி பலன் குறை­ய­லாம். இது டெபா­சிட்­களை முதன்­மை­யான முத­லீ­டாக கரு­து­ப­வர்­க­ளுக்கு
தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். முத­லீட்­டா­ளர்­கள், அதிக பலன் தரக்­கூ­டிய வேறு முத­லீட்டு
வாய்ப்­பு­களை பரி­சீ­லிக்­க­லாம். பி.பி.எப்., உள்­ளிட்ட சிறு­சே­மிப்பு திட்­டங்­கள் ஏற்­ற­தாக
இருக்­கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)