தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறதுதாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது ...  மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரிப்பு மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
2020: ரியல் எஸ்­டேட் துறை­யில் எதிர்­நோக்க கூடிய போக்­கு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
23:59

இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின் முக்­கிய துறை­களில் ஒன்­றாக ரியல் எஸ்­டேட் விளங்­கு­கிறது. நாட்­டின் ஜி.டி.பி.,யில் 6 முதல், 8 சத­வீத பங்கு செலுத்­தும் இந்த துறை, வேலை­வாய்ப்பு
உரு­வாக்­கத்­தில் இரண்­டா­வது இடம் வகிக்­கிறது.

அண்மை காலத்­தில் சவா­லான சூழலை இத்­துறை எதிர்­கொண்டு வரும்நிலை­யில், வரும், 2020ம் ஆண்­டில் ரியல் எஸ்­டேட் துறை­யில் எதிர்­பார்க்க கூடிய முக்­கிய போக்­கு­களை
வல்­லு­னர்­கள் அடை­யா­ளம் கண்­டுள்­ள­னர்:

தொழில்­நுட்ப தாக்­கம்:

ரியல் எஸ்­டேட் துறை­யில், கட்­டு­மா­னம் மட்­டும் அல்­லா­மல், வாங்­கும் செயல்­முறை,தக­வல்­களைஅணு­கு­வது நவீ­ன­ம­ய­மா­கி­யி­ருக்­கிறது. வீடு வாங்­கு­ப­வர்­கள் நேரில் விஜ­யம் செய்­யா­மல் டிஜிட்­டல் முறை­யில் பார்­வை­யிட உத­வும் ஆக்­மென்­டட் ரியா­லிட்டி மற்­றும் விர்ச்­சு­வல் ரியா­லிட்டிநுட்­பங்­கள் பிர­ப­ல­மாக உள்­ளன

வெளி­நாட்டு முத­லீடு:


முன்­னணி நக­ரங்­களில் ரியல் எஸ்­டேட்திட்­டங்­கள், வெளி­நாடு முத­லீட்டை ஈர்த்து
வரு­கின்­றன.வர்த்­தக திட்­டங்­களில் அதிக ஆர்­வம் இருக்­கிறது. மேலும்ரியல் எஸ்­டேட்
முத­லீட்டு அறக்­கட்­டளை (ஆர்.இ.ஐ.டி.,)நிதிக்கு கிடைத்­துள்ள ஆத­ர­வால், இந்த வகை
முத­லீடு அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.


நுகர்­வோர் ஆர்­வம்:


அண்மை காலத்­தில் ஏற்­பட்ட தேக்க நிலை கார­ண­மாக ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­கள் தங்­கள் உத்­தியைமாற்­றிக்­கொண்­டுள்­ளன. குறைந்த விலை வீடு­கள் பிரி­வில்நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்­து­கின்­றன. அரசு தரப்­பில்அனை­வ­ருக்­கும் வீடு திட்­டத்­திற்கு முக்­கி­யத்­து­வம்
அளிக்­கப்­படும் நிலை­யில், இந்த போக்கு மேலும் தீவி­ர­மா­கும்


அரசு ஆத­ரவு:


தேக்க நிலை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­னை­கள்கார­ண­மாக, ரியல் எஸ்­டேட் துறை­யில் பல திட்­டங்­கள் முடிக்­கப்­ப­டா­மல் தாம­த­மாகி வரு­கின்­றன. நிலு­வை­யில் உள்ள திட்­டங்­களுக்கு உத­வும் வகை­யில் அரசு அறி­வித்து 25 ஆயிரம் கோடி நிதி உதவி பெரும் ஊக்­க­மாக
அமைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக பல திட்­டங்­கள் புத்­து­யிர் பெற்று விரைந்து
முடிக்­கப்­ப­ட­லாம்.


புதிய பிரி­வு­கள்:


அண்மை ஆண்­டு­களில் ரியல் எஸ்­டேட்துறை­யில் புதிய பிரி­வு­கள் கவ­னத்தை ஈர்த்து
வரு­கின்­றன. நகர்ப்­பு­றத்­தில் கல்வி பயில வரும் மாண­வர்­களை மன­தில் கொண்ட
ஸ்டூ­டண்ட் ஹவு­சிங் திட்­டங்­கள் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கூட்டு பணி­யாற்­று­வ­தற்­கான, ‘கோ-வொர்­கிங் ஸ்பேஸ்’ திட்­டங்­களும் அதி­க­ரிக்­கும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)